அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கருணாநிதி டெல்லி பயணம்!
Wednesday, 23 July 2008
 முதலமைச்சர் கருணாநிதி இன்று காலை 10 ம‌ணி‌க்கு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செ‌‌ன்றா‌ர். அவர் அங்கு பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செ‌‌‌ன்றா‌ர்.

அவருடன் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, வேலு ஆகியோர் செல்கிறார்கள். இந்த விமானம் பகல் 12.40 மணிக்கு டெல்லி போய் சேர்கிறது. டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆகியோரை சந்தித்து வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவிக்கிறார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code