| வயிற்றுப் போக்குக்கு என்ன மருந்து? |
| Friday, 07 December 2007 | ||||
வயிற்றுக் போக்கு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கக் கூடும். உண்ட உணவு சரியாக ஜீரணமாகததாலோ உடற்சூடு அதிகரிப்பதன் காரணமாகவோ வயிற்றுப் போக்கு இருப்பின் மிளகு சீரகத்தை ஆதாரமாகக் கொண்டு மருந்து தயாரித்து உண்டு நலம் பெறலாம். இதோ கை வைத்தியம்... மிளகு - 5 கிராம் வெள்ளை பூண்டு பற்கள் - 3 சீரகம் - 3 கிராம் உப்பு - சிறிதளவு வெள்ளைப் பூண்டின் தோலை உரித்து எடுத்துக் கொண்டு மற்ற பொருட்களையும் சேர்த்துக் கொண்டு சிறிது நீர் விட்டு மை போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுதினை இரண்டு சமபாகங்களாகப் பிரித்து ஒரு பாகத்தை காலையிலும் மறுபாகத்தை மாலையிலும் உட்கொண்டு வந்தால் அஜீரணம் அல்லது உக்ணம் காரணமாக ஏற்பட்ட வயிற்றுப் போக்கு நின்று போய் விடும்.
Write Comment |
||||

வயிற்றுக் போக்கு ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கக் கூடும். 


