அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
மிகச் சிறந்த வலி நிவாரணி மிளகு
Friday, 07 December 2007
நம் அன்றாடம் பயன்படுத்தும் மிளகில் எத்தனை எத்தனை மருத்துவ குணங்கள். இதனை முன்னரே அறிந்த நம் மூதாதையர்கள் நமது உணவு வகைகள் அனைத்திலும் சேர்த்து பயன்படுத்தியுள்ளனர். இதனை லண்டனில் சமீபத்தில் நடந்த ஆய்வும் உறுதி செய்துள்ளது.

உணவில் காரத்திற்காகவும் சுவையை கூட்டுவதற்காகவும் இந்த மிளகு நம் அன்றாடத் தேவைகளில் அத்தியாவசிய இடத்தை பிடித்துள்ளது. மேலும் சளி இருமல் போன்ற சிறு சிறு நோய்களுக்கும் நிவாரணியாக இந்த மிளகு பயன்பட்டு வருகிறது.

லண்டனில் உள்ள ஹோவார்டு மருத்துவப் பள்ளியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மிளகு மிகச் சிறந்த வலி நிவாரணியாக பயன்படுவது தெரியவந்துள்ளது.

மிளகில் கிடைக்கக் கூடிய கேப்சசின் என்ற பொருளிலிருந்து க்யு எக்ஸ் - 314 என்ற மருந்து தயார் செய்யப்பட்டது.

இதனை பிள்ளைப்பேறு காலத்திலும் வலியைப் போக்குவதிலும் மருத்துவத் துறையிலும் இந்த மருந்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்த மருந்தினை உண்பவர்களுக்கு எந்தவித பக்க விளைவும் ஏற்படாது. மேலும் இந்த மிளகு மருந்து நோய்க்கான மூலத்தில் இருந்தே குணப்படுத்துவதால் நோயாளிக்கு ஏற்கனவே இருந்த சில நோய்களும் குணமடைய வாய்ப்புள்ளது என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code