|
Friday, 07 December 2007 |
|
தேன் சுவையானது மட்டுமல்ல பல்வேறு மருத்துவ குணங்களும் கொண்டது. ஆனால் அந்த தேனை உட்கொள்ளும் போது
நாம் கவனிக்க வேண்டிய சில விகயங்கள் இருக்கிறது தெரியுமா...
தேனை சுடான உணவு பொருட்களுடன் கலக்கக் கூடாது.
தேனை சுடாக்குவதை தவிர்க்க வேண்டும். வெப்ப நிலை அதிகமாக உள்ள இடங்களில் வேலை செய்பவர்கள் தேன் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தேனை மழை நீர் கடுகு நெய் மற்றும் காரமான உணவு வகைகளுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது.
தேன் பல மலர்களின் மதுரம் கலந்த ஒரு கலவையே. அதில் நச்சு தன்மை வாய்ந்த மலர்களும் அடங்கும். நஞ்சு பொதுவாக
கார மற்றும் உக்ண குணங்களையே கொண்டிருக்கும். ஆகவே தேனை கார மற்றும் சுடான உணவு பொருட்களுடன் கலக்கும்
போது இந்த நச்சு தன்மைகள் மேலோங்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
|