அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சூட்டைத் தணிக்கும் வெந்தயம்
Thursday, 27 December 2007
 நமது உணவோடு சேர்க்கப்படும் பொருட்களில் வெந்தயமும் ஒன்று. இது உணவுக்கு ருசியைக் கொடுப்பதற்காக மட்டும் சேர்க்கப்படுவது அல்ல. இதில் பல்வேறு மருத்துவக் குணங்கள் அடங்கி உள்ளன.

நீங்களும் தெரிஞ்சுகிட்டீங்கனா... மிக உபயோகமாக இருக்கும்.

வெந்தயம் பொதுவாக குளிர்ச்சித் தன்மையுடையது. இதனை நன்கு வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், உட்சூடு, வெள்ளைப்படுதல் ஆகிய பிரச்சனைகள் நீங்கும்.

ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் இது பயன்படுகிறது. 20கி வெந்தயத்துடன் 340கி பச்சரிசியை சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட்டால் ரத்தம் சுரக்கும்.

பிரசவமான பெண்கள் கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

காபி சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் வறுத்த வெந்தயம் மற்றும் வறுத்த கோதுமையுடன் காபிக்கு பதிலாக பருகலாம். இதன் மூலம் உடல் சூடு தணியும்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code