அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
இருதயத்துக்கு இதமானது பூண்டு
Tuesday, 30 October 2007
garlicஇருதயம் வலுவாக இருக்க, நோய் வராமல் இருக்க தினமும் உணவில் பூண்டு சேர்த்தால் போதும் என்கின்றனர் பிரிட்டன் அறிவியில் விஞ்ஞானிகள்.

இதைத்தான் காலாகாலமாக நமது பாட்டி முப்பாட்டன்கள் நமக்குச் சொல்லி விட்டுச் சென்றனர்.  அதனை இப்போது, பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாமின், அலபாமா பல்கலைக்கழக நிபுணர்கள், தங்கள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வு மேற்கொண்ட குழுவின் தலைவர், நிபுணர் டேவிட் கிராஸ் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இருதயத்துக்கு மிகவும் நல்லது பூண்டு. பூண்டில் உள்ள அலிசின் என்ற ரசாயனம், ரத்த ஓட்டம் தடைபடாமல், ரத்தம் கட்டாமல் , ரத்தக்குழாய்களை வலுவாக இருக்க வைக்கிறது. ரத்தக்குழாய்களில், எந்தவித கொழுப்பு சேர்வதையும் தடுக்கிறது.
நாம் சாப்பிடும் உணவு வழியாக பூண்டு, நம் உடலுக்குள் சென்றவுடன், அதில் இருந்து அலிசின் ரசாயனம் பிரிகிறது. அதில் இருந்து, சல்பர் கரைசல் உருவாகி, சிவப்பு அணுக்களுடன் சேருகிறது.

அப்போது, சிவப்பு அணுக்களில், ஹைட்ரஜன் சல்பைடாக மாறுகிறது. அதனால், ரத்த ஓட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. சீராக இருதயத்துக்கு ரத்தம் செல்கிறது. மருந்துகள் மூலம், உடலில் சிவப்பு அணுக்களில் ஹைட்ரஜன் சல்பைடு கூட தாமதமாகத்தான் உருவாகிறது. ஆனால், பூண்டை சாப்பிட்டவுடன், உடனே ஹைட்ரஜன் சல்பைடு உருவாகிறது. இது எங்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரத்த செல்கள் சீராக இருக்க, இந்த ரசாயனம் முக் கியம். அதை பூண்டு, மிகச்சுலபமாக தருகிறது. பூண்டு சாப்பிட்டு வருவோருக்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதால், ரத்த அழுத்தம் வரவே வராது. அதனால், நுரையீரல் உட்பட முக்கிய உறுப்புகளுக்கு ஆக்சிஜன் அதிகமாகவே கிடைக்கிறது.

இவ்வாறு நிபுணர் டேவிட் கிராஸ் கூறினார்.


Comments (1)
RSS comments
24-05-2008 10:34
Vannakkam.Neengal sonnapadi en marumahallokku vasithu kaddinenan.Eppodu muthal poondu sappida aarambidthu viddal.Nanri.
Written by A.Antonyraj.Chennai. (Guest)

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code