|
Monday, 04 February 2008 |
|
இன்றைய நம் எல்லாத் தேவைகளுக்கும் கம்ப்யூட்டர் இன்றியமையாததாகி விட்டது. அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணி முழுவ்தும் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் ஒருபுறம் என்றால், வீட்டில் இருக்கும் பெண்கள் தங்கள் பொழுதுகள் அனைத்தையும் டிவி பார்ப்பதிலேயே கழித்து வருகின்றனர்.
இப்படி, கம்ப்யூட்டர், டிவி என தொடர்ந்து பார்த்து வருவதால், நம் கண்களுக்கு அயர்வு ஏற்படுகிறது. அதற்கு ஓய்வு தேவைப்படுகிறது. ஆனால், அதற்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை.
தொடர் வேலைப் பளு, வெயிலில் அலைவது ஆகிய காரணத்தால் உடல் உஷ்ணமும் கூடுகிறது. இதன் மொத்த விளைவு கண் எரிச்சலை உண்டு பண்ணுகிறது.
கண் எரிச்சலைக் சரி செய்ய இதோ டிப்ஸ் :
தேவையானவை :
அதிமதுரம் கடுக்காய் திப்பிலி மிளகு
இவையெல்லாம் தேவையான அளவு எடுத்து அதனை வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் காணாமல் போகும். கண் பிரகாசமடையும். இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு உண்டு வர வேண்டும்.
|