அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
உப்பு உடம்புக்கு கெடுதலா...?
Tuesday, 12 February 2008
 'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்று கூறிய நம் முன்னோர்கள்தான் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறியிருக்கிறார்கள்.

உணவிற்கு சுவை கூட்டக் கூடிய இந்த உப்பை நாள் தோறும் நாம் உண்டு வரும் போது, மறைமுகமாக நஞ்சினை உடலில் ஊட்டி வளர்க்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நீங்கள் சாப்பிடுகின்ற 1 கிராம் உப்பின் எரிச்சலைப் போக்க 70 கிராம் தண்ணீர் குடித்தால் தான் உப்பின் நஞ்சுத் தன்மையைப் போக்க இயலும் என மேலை நாட்டு மருத்துவக் குறிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

உப்பு அதிகமாகச் சேர்த்துக் கொள்வதால் உடலின் எடை கூடுகிறது. உப்பே இல்லாது உணவை உட்கொள்ளப் பழக்கிக் கொள்வது நல்லது. உடலில் உப்புச்சத்துக் குறையக் குறைய உங்களது எடையும் சீராகவே இருக்கும்.

உப்பில்லாத உணவால், நமது நினைவாற்றல் குறையும் என்ற தவறான கருத்து நம்மிடையே இருக்கிறது. உப்பை அதிகம் சேர்த்துக் கொள்வதால் சிறுநீரகத்தை இயங்காது தடுத்து விடுவதோடு, மூளை வளர்ச்சியையும் பெரிதும் பாதித்து விடுகிறது.

அதெல்லாம் சரி! இப்படி ஒரேடியாக உப்பைத் தவிர்த்து விட்டால், நமது உடலுக்கு உப்பு சத்து என்ற ஒன்று வேண்டாமா என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு கேட்கிறது. அதற்காகத்தான் நமது சித்த மருத்துவர்கள், உப்புச் சத்து  நிறைந்த இயற்கை உணவுகளை சேர்க்கச் சொல்லி இருக்கிறார்கள்.

மூளைக்கீரை, வாழைத்தண்டு, கீரைத்தண்டு, முள்ளங்கி, காரட், சௌசௌ, வெண்பூசணி, வெங்காயக்கீரை, முட்டைக்கோஸ் நூல்கோல் வெள்ளரிப்பிஞ்சு, நுங்கு, ஆப்பிள், திராட்சை, வெங்காயம், பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய் போன்றவற்றை உணவோடு சேர்த்துக் கொண்டால் நமக்கு கிடைத்துவிடுகிறது.

நமது உடல் நலத்திற்குத் தேவையான உப்பு சத்து இயற்கை உணவிலேயே இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு, அதனையே உண்டு இன்புற்று வாழுங்கள்.


Comments (1)
RSS comments
08-05-2008 18:35
Written by ammaa (Guest)

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code