| அஜீரணக் கோளாறா? |
| Wednesday, 12 March 2008 | ||||
அளவுக்கதிகமாக சாப்பிட்டு விட்டால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு விடுகிறது. அஜீரணத்தையும் பித்தையும் விரட்ட சித்த மருத்துவத்தில் வழியுண்டு. தேவையானவை : சுக்கு,மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் ஆகிய வகைகளை தலா 50 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் சர்க்கரை 250 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். செய்யவேண்டியவை : மருந்துச் சரக்குகளை சுத்தம் செய்து, இள வறுவலாக வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். சர்க்கரையையும் நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். மருந்து சூரணத்துடன் சர்க்கரையை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மருந்தை ஒன்று அல்லது இரண்டு சிட்டிகை எடுத்து அதனை நெய் அல்லது தேனில் கலந்து ஒருநாளைக்கு இரண்டு வேளை உட்கொள்ள அஜீரணம் மற்றும் பித்தக் கோளாறுகள் வந்த வழி தெரியாமல் அகலும்.
Write Comment |
||||

அளவுக்கதிகமாக சாப்பிட்டு விட்டால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு விடுகிறது. அஜீரணத்தையும் பித்தையும் விரட்ட சித்த மருத்துவத்தில் வழியுண்டு. 


