|
பாலுணர்வைத் தூண்டும் வெங்காயம்
|
|
Monday, 17 March 2008 |
காய்கறிகளின் 'வயாக்ரா' என முருங்கையைத் தான் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், முருங்கையை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வெங்காயத்தில் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் அதிகளவில் உள்ளன. மேலும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட நாட்கள் வாழ முடியும்.
தேனீ கொட்டி விட்டால் கொட்டிய இடத்தில் வெங்காயத்தை வைத்து தேய், என பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அது முற்றிலும் உண்மை. வெங்காயத்திற்கு விஷத்தை முறிக்கும் தன்மையும், அழற்சியை ஏற்படுத்தும் கூட்டுப் பொருளை அழிக்கும் வல்லமையும் உண்டு.
வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது.
பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.
முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.
வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங்கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.
பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறாகள். இதற்கு 'மெடிசின்' வெங்காயம் என்ற பெயரே உண்டு.
வெங்காயத்தை பச்சையாகவோ, சமைத்தோ, சாலட்டாகவோ உண்ணலாம்.
|