அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சென்னைக்கு எதிராக ரன் குவிப்போம் யுவராஜ்
Saturday, 10 May 2008
 சென்னை மே 10:

இன்று நடைபெறவுள்ள ஐ.பி.எல். 31 போட்டி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினர் மோத உள்ளனர்.

சேப்பாக்கத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டம் குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் யுவராஜ் சிங் கூறியபோது

இப்போட்டியில் காயம் காரணமாக சங்ககரா ஆடவில்லை எனினும் இதை நாங்கள் சரிசெய்து விடுவோம். அவர் இல்லாததால் எங்கள் அணிக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முயற்சி மேற்கொள்வோம்.

முதல் 2 ஆட்டத்தில் நாங்கள் தோற்றாலும் அதன் பிறகு சிறப்பாக ஆடி வருகிறோம். தொடர்ந்து 5 ஆட்டத்தில் வென்றுள்ளோம். எங்கள் அணி சமபலத்துடன் உள்ளது. பேட்டிங்கில் வலிமையாக இருக்கிறோம். இதனால் சென்னை அணிக்கு எதிராக மிகப்பெரிய ரன்னை குவிப்போம் என கூறினார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code