அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
ஆனந்துக்கு பத்ம விபூஷன் விருது
Sunday, 11 May 2008
 நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றவிழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல செஸ் வீரர் விசுவநாதன் ஆனந்துக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது மற்றும் பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு பத்ம பூஷண் விருதையும் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார்.

கலை இலக்கியம் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த சேவை செய்தவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு பத்ம விபூஷண் விருதுக்கு 13 பேரும் பத்ம பூஷண் விருதுக்கு 35 பேரும் பத்மஸ்ரீ விருதுக்கு 71 பேரும் தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.

பத்ம விருதுகள் வழங்கும் விழா கடந்த 5ந் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. அன்று முதல் கட்டமாக 56 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்கினார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code