| ஹாக்கி அணிக்கு பாராட்டு |
| Tuesday, 20 May 2008 | ||||
மலேசியாவில் நடந்த சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.அஸ்லான் ஷா போட்டியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பைனலுக்கு முன்னேறிய இந்திய அணி அர்ஜென்டினாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்று தங்கப்பதக்கத்தை நூலிழையில் நழுவவிட்டது. இந்திய ஹாக்கி சம்மேளனம் கூண்டோடு கலைக்கப்பட்ட நிலையில் இடைக்கால தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்ட இளம் வீரர்கள் அடங்கிய அணி பைனலுக்குத் தகுதி பெற்றதே பெரிய சாதனைதான். முதல் 2 லீக் ஆட்டங்களிலும் தோற்ற இந்தியா பின்னர் தொடர்ச்சியான 4 ஆட்டத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச் செயலர் ரந்தீர் சிங் கூறுகையில் அர்ஜென்டினா போன்ற பலமான அணிக்கு டுகொடுத்ததுடன் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்குத்த குதி பெற்ற 3 அணிகளை வீழ்ததியது மகத்தானது. இந்த வெற்றி வலுவான இந்திய ஹாக்கி அணியை உருவாக்க உதவும் என்றார். ஈ
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

மலேசியாவில் நடந்த சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.


