அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
அரையிறுதி: சென்னையா? மும்பையா?
Tuesday, 27 May 2008
 சென்னை மே 27:

ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியின் லீக் ஆட்டங்கள் நாளையுடன் முடிகிறது. 56 ஆட்டத்தில் நேற்றுடன் 53 ஆட்டங்கள் முடிந்து விட்டன.

அரையிருதி தகுதிச்சுற்றுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சா டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 3 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டநிலையில் இன்னும் ஒரு அணி இடம்பெற வேண்டிய நிலையில் இன்று நடைபெறவிறுக்கும் சூப்பர் கிங்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

சென்னை அணியினருக்கு இது முக்கிய கடைசி போட்டியாகும் இதில் வெற்றிபெற்றாலொழிய அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற இயலாத நிலையில் தள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மும்பை அணியினருக்கு கடைசி போட்டியாக மும்பை - பெங்களுர் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். மும்பை வெளியேறி விடும். மாறாக சென்னை தோற்றால் அரை இறுதியில் நுழையுமான என்பது சந்தேகம்தான்.

தற்போது ரன்ரேட் படி மும்பைக்கே சாதகமாக உள்ளது. இன்றைய விளையாட்டில் சென்னை தோற்று நாளைய விடையாட்டில் மும்பை வெற்றிபெற்றால் சென்னை அரை இறுதிக்கு தகுதிபெறமுடியாதநிலையில் தள்ளப்படும். எனவே இன்றைய போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு இன்றைய போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய நிலையில் உள்ளனர்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code