அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
அரை இறுதிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்
Wednesday, 28 May 2008
 ஹைதராபாத்: ஐபிஎல் டுவென்டி 20 தொடரின் அரைஇறுதிப் போட்டிக்கு வெற்றிகரமாக நுழைந்தது. டெக்கான் சார்ஜர்ஸ் அணி தனது கடைசி போட்டியிலும் தோல்வியுற்று போட்டித் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் முக்கியப் போட்டியில் மோதின. ஹைதராபாத் அணிக்கு இந்த போட்டி எந்த வகையிலும் முக்கியமானதல்ல. காரணம் ஏற்கனவே அது அரை இறுதிக்கான வாய்ப்பை நழுவ விட்டிருந்தது. ஆனால் சென்னை அணி வெற்றி பெற்றால்தான் அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை நிலவியது.

டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை எடுத்தது. அந்த அணியின் வேணுகோபால் ராவ் 46 ரன்களை எடுத்தார். அதேபோல ரவி தேஜாவும் சிறப்பாக ஆடி 28 பந்துகளில் 40 ரன்களைக் குவித்தார்.

இதனிடையே 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை களம் இறங்கியது. இதனிடையே 19.2 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 148 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

இதன்காரணமாக சென்னை அணி 3வது இடத்திற்கு முன்னேறி அரை இறுதிச் சுற்றில் இடம் பெற்றுள்ளது.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code