அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
ஐ.பி.எல்: ராஜஸ்தான் அபார வெற்றி
Monday, 02 June 2008
 மும்பை ஜுன் 2:

ஐ.பி.எல். நேற்று மும்பையில் நடைபெற்ற ஐ.பி.எல். டுவென்டி 20 தொடரின் இறுதி ஆட்டத்தில் கடைசிப் பந்தில் வெற்றிக்குத் தேவையான ரன்களை எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. கடுமையாகப் போராடியும் சென்னை அணியால் வெற்றிக் கோட்டைத் தாண்ட முடியாமல் போனது.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஷேன் வார்னே முதலில் சென்னையை பேட் செய்யப் பணித்தார். முதலில் பட்டேலும்-38 ரன்களுடனும் வித்யூத் சிவராமகிருஷ்ணன் - 16 ரெய்னா-43 மார்க்கல் 16 டோனி 29 ரன்களும் போட்டியில் இறுதியில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்தது சென்னை.

பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தனது அபார ஆட்டத்தில் கடைசி ஓவரில் 6வது பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை பாலாஜி போட்ட பந்தை அடித்த தன்வீர் அந்த பந்தில் ஒரு ரன் எடுத்து ராஜஸ்தானை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார்.

மிகவும் திரில்லிங்காக இருந்த இந்த ஓவரில் ராஜஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி அவர்கள் வசமானது. சென்னை வீரர்கள் பெரும் ஏமாற்றத்தில் மூழ்கினர்.

ஐ.பி.எல். தொடரின் முதலாவது சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ. 4.8 கோடி பரிசுத் தொகையும் வைரம் பவளம் மாணிக்கம் பதித்த கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. சென்னை அணிக்கு ரூ. 2.4 கோடி பரிசுத் தொகை கிடைத்தது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code