| பேட்டிங் வரிசையில் குளறுபடி: டோனி |
| Monday, 16 June 2008 | ||||
ஜுன் 16:வங்கதேசம் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்றது. வங்கதேச அணி லீக் சுற்றின் 2 ஆட்டங்களிலும் தோல்வியுற்றதால் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பைனலுக்கு தகுதி பெற்றன. பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் 140 ரன் வித்தியாசத்தில் இந்தயா இடமாலய வெற்றியைப் பார்த்தது. இதையடுதுது கோப்பையை இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மிர்பூரில் நேற்று முன்தினம் நடந்த பைனலில் பாகிஸ்தான் 315 ரன் எடுத்தது. அதைத்தொடர்ந்து ஆடிய இந்தியா 48.2 ஓவரில் 290 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து கோப்பையை பாகிஸ்தான் வென்றது. தோல்விகுறித்து டோனி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளத்தை நல்ல முறையில் பயன்படுத்திய பாகிஸ்தான் அணி 315 ரன் குவித்தது. எல்லா வீரர்களும் நல்ல பார்மில் இருந்ததால் எளிதாக வெற்றி பெறுவோம் என்று நினைத்தேன். அதிகம் எதிர்பார்த்தக சேவாக் சொதப்பி விட்டார். அடுத்த வந்த வீரர்களும் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தனர். எனக்கு முன்னாள் ரெய்னாவை களம் இறக்கியது நான் செய்த பெரிய தவறு. அந்த இடத்தில் நான் சென்றிருக்க வேண்டும். இனி இம்மாதிரியான தவறை செய்யாமல் பார்த்துக் கொள்வேன் என்றார்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

ஜுன் 16:


