அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சானியா அபார வெற்றி
Tuesday, 17 June 2008

 ஆர்டினா ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா வெற்றி பெற்றுள்ளார். உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யு.டி.ஏ. அந்தஸ்து பெற்ற ஆர்டினா ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடக்கிறது.

 

நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் (சானியா தரவரிசையில் 33) இத்தாலியின் பென்னட்டாவை (தரவரிசையில் 23) எதிர்கொண்டார். சமீபத்தில் முடிந்த பிர்மிங்ஹாம் ஓபன் டென்னிஸ் தொடரில் விரைவில் வெளியேறி ரசிகர்களை ஏமாற்றிய இவர் இங்கு அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் செட்டை 6-4 என வென்றார்.

 

2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இவர் அதை 6-3 என எளிதாக வென்றார். இறுதியில் 6-4 6-3 என்ற நேர் செட்களில் வென்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code