அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கால்இறுதிக்குள் நுழைந்தது ஜெர்மனி
Wednesday, 18 June 2008
 ஐரோப்பிய கால்பந்து போட்டியில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தது ஜெர்மனி அணி.

13வது ஐரோப்பிய கால்பந்து பொட்டி ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் நடந்து வருகிறது. இதில் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. ஒவ்வொரு பிரிவில் இருந்தும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

நேற்று கடைசி லீக் ஆட்டங்கள் நடந்தன. இதில் ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் ஜெர்மனியும் ஆஸ்திரியாவும் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஜெர்மனி தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆஸ்திரிய வீரர் இவான்ஸ்சிட்ஸ் ஜெர்மனியின் பிலிப்லாமை பிடித்து இழுத்து பவுல் செய்ததற்காக ஜெர்மனிக்கு பிரிஹிக் வாய்ப்பு வழங்கப்பட்ட இதனை பயன்படுத்திக் கொண்ட ஜெர்மனி கேப்டன் மைக்கேல் பல்லாக் 25 மீட்டர் தூரத்தில் இருந்து அடித்த பலமான ஷாட் எந்த தடையும் இன்றி நேராக போய் கோல் வலைக்குள் விழுந்தது. இதனால் ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. மேற்கொண்டு கோல் அடிக்க இரண்டு அணியினரும் எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் 1-0 என்ற நிலையில் ஜெர்மனி அணி வெற்றிபெற்றது.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code