| இறுதி போட்டியில் இந்தியா நுழையுமா? |
| Thursday, 03 July 2008 | ||||
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்காளதேசம் அகிய 4 நாடுகள் தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பு 309 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதனிடையே இன்று நடைபெறவுள்ள 5 வது ஆடடத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு இது வாழ்வா சாவா போராட்டம் ஆகும். வெற்றி பெற்றால் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும். தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் - வங்காளதேசம் மோதும் ஆட்ட முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இதில் பாகிஸ்தான் தோற்றாம் இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். இன்றைய போட்டியில் இலங்கையை தோற்கடித்து விட்டால் இந்தியாவுக்கு இறுதிப்போட்டிக்கு எளிதாக முன்னேற வாய்ப்புள்ளது. இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஆட்டங்களில் இந்தியா இலங்கை தலா 2 போட்டியில் வெற்றி பெற்றன. மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்காளதேசம் அகிய 4 நாடுகள் தகுதி பெற்றன. நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பு 309 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.


