அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
Friday, 04 July 2008
 ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. இறுதிப்போட்டிக்குள் நுழைய கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா களம் இறங்கியது.

டாஸ்வென்ற இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இலங்கை ஆட்ட முடிவில் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது.

அதைத்தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்து வலுவான அஸ்திவாரம் அமைத்து கொடுத்தனர். ஷேவாக்-42 கம்பீர்-68 ரெய்னா-54 டோனி 67 ல் போல்டு ஆனார். இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 310 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

பாகிஸ்தான் வெளியேற்றம்:

இறுதிப்போட்டி கனவில் இருந்த பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டது. சூப்பர்-4 இன்று நடக்கும் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்காளதேசத்தை வென்றாலும் பயன் இல்லை.

இறுதிப்போட்டி:

இந்தியா இலங்கை அணிகள் வருகிற 6ந் தேதி நடக்கிறது.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code