| விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன் |
| Monday, 07 July 2008 | ||||
கிராட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.இதில் ரோஜர் பெடரர் மற்றும் ரபெல் நடால் மோதினார்கள். மழையால் ஆட்டம் அவ்வப்போது பாதிக்கப்பட்டது. முதல் செட்டை நடால் 6-4 என்ற கணக்கில் எளிதில் வென்றார். அதே உத்வேகத்துடன் விளையாடி அவர் 2வது செட்டையும் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். 3வது செட்டில் பெடரர் ஆக்ரோஷமாக விளையாடினார். நடாலும் ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. 6-6 என்ற சமநிலை ஏற்பட்டது. இதனால் டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் 7-5 என்ற கணக்கில் பெடரர் வென்றார். மற்றும் 4வது செட்டில் 6-6 என்ற சமநிலை ஏற்பட்டு டைபிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் பெடரர் 10-8 என்ற கணக்கில் வென்றார். இருவரும் தலா 2 செட்களை கைப்பற்றி இருந்ததால் சாம்பியன் பட்டத்தை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் பரபரப்பு ஏற்பட்டது. கடைசி செட்டில் நடால் 9-7 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

கிராட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.


