| இலங்கை தொடர்: டோனி விலகல் |
| Wednesday, 09 July 2008 | ||||
இந்திய அணி இலங்கை சென்று 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் ஜுலை 23ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி மும்பையில் நேற்று தேர்வு செய்யப்பட்டது.டோனிக்கு ஓய்வு: தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருவதால் சோர்வடைந்துள்ள ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் டோனி இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து தனக்கு ஓய்வளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய செயலர் நிரஞ்சன் ஷாவிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது. அதிரடி தொடக்க வீரர் சேவாக் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த போட்டிகளில் அபாரமாக விளையாடி வரும் சேவாக் - கம்பீர் ஜோடி இலங்கை டெஸ்ட் தொடரிலும் தொடக்க ஜோடியாகக் களமிறங்குகிறது. மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் சச்சின் கங்குலி டிராவிட் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். லட்சுமணும் திரும்பியுள்ளார்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

இந்திய அணி இலங்கை சென்று 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொழும்பு நகரில் ஜுலை 23ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி மும்பையில் நேற்று தேர்வு செய்யப்பட்டது.


