அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
Wednesday, 16 July 2008
 இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் 23ந் தேதி கொழும்பில் தொடங்குகிறது. இதில் விளையாடுவதற்காக கும்ளே தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி நேற்று சென்னையில் இருந்து இலங்கை சென்றடைந்தது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி இலங்கை போர்டு லெவனுடன் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம் 18ந் தேதி தொடங்குகிறது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் சவால் நிறைந்தது. ஆனால் இதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். டெஸ்டில் வெற்றி பெற கடுமையாக போராடுவோம்.

அஜந்தா மெடீஸ் சிறந்த பவுலர்தான். ஆனால் எங்களது அனுபவம் வாய்ந்த மிடில் ஆர்டர் வரிசை பேட்ஸ் மேன்கள் அவரது பந்து வீச்சை எதிர்கொள்வதில் சிரமம் இருக்காது. டோனி ஆடாததால் தினேஷ் கார்த்திக் அல்லது பார்த்தீவ் பட்டேலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். டோனி இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நினைக்கிறேன். பேட்டி பந்து வீச்சில் அணி சமநிலையில் உள்ளது என்றார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code