| டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல் |
| Tuesday, 22 July 2008 | ||||
கொழும்பு ஜுலை 23:கும்ளே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி இன்று தொடங்குகிறது. இலங்கை மண்ணில் தொடரை வெல்லும் வேட்கையில் இந்தியா கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது. கடைசியாக இலங்கை மண்ணில் 2001ம் ஆண்டு விளையாடிய போது இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஆசிய கோப்பையில் சிறப்பாக பந்து வீசிய இலங்கை புதுமுக வீரர் அஜந்தா மெடீஸ் டெஸ்ட் அணியில் முதல் முறையாக இடம் பெற்று உள்ளார். அவரது பந்து வீச்சை சமாளிக்க இந்திய பேட்ஸ்மேன்கள் கடுமையாக போராடவேண்டியிருக்கும். இந்திய அணியில் பேட்டிங் வரிசை பலம் வாய்ந்தது. ஷேவாக்கும் காம்பீரும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். டிராவிட் தெண்டுல்கர் கங்குலி லட்சுமண் ஆகியோர் அதற்கு அடுத்த பேட்டிங் வரிசையில் உள்ளனர். விக்கெட் கீபரில் தினேஷ் கார்த்திக் களம் இறங்கலாம். 4 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கலாம். இலங்கையை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்க இந்திய வீரர்கள் கடுமையாக போராடவேண்டியிருக்கும்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

கொழும்பு ஜுலை 23:


