| இந்திய பவுலர்கள் அபாரம் |
| Thursday, 24 July 2008 | ||||
கொழும்பு ஜுலை 24:இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 85 ரன் எடுத்துள்ளது. இந்தியா - இலங்கை அணிகளிடையே முதல் டெஸ்ட் கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்ல் நேற்று தொடங்கியது. மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக கொழும்பு டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டது. 22 ஓவர்கள் மட்டுமே நடந்த ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் துவக்கத்தில் அசத்தினர். இலங்கை 2 விக்கெட்டுக்களை இழந்த போதும் வர்ணபுரா அரைசதம் அடித்து நம்பிக்கை தந்தார். மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்கியதும் டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் மெண்டிஸ் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டார். இந்திய அணியில் இஷாந்த் ஜாகீர் என 2 வேகங்கள் மட்டுமே இடம் பெற்றனர். வர்ணபுரா 50 ஜெயவர்த்தனே 16 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்றும் நாளையும் ஆட்டம் ஒரு மணி நேரம் முன்னதாக (இன்று காலை 9.30 மணிக்கு) தொடங்கும் என நடுவர்கள் அறிவித்துள்ளனர்.
Write Comment |
||||
மற்றவை
- இந்திய பவுலர்கள் அபாரம்
- டெஸ்ட் போட்டி: இந்தியா-இலங்கை மோதல்
- ஜுனியர் ஆக்கி: இந்தியா வெற்றி
- இலங்கை தொடர் சவாலானது: கும்ளே
- இ.தொ.சிறப்பாக ஆடுவேன்: டெண்டுல்கர்
- இ.டெ.தொ.: தெண்டுல்கர் உடல் தகுதி
- இலங்கை தொடர்: டோனி விலகல்
- விம்பிள்டன் டென்னிஸ்: நடால் சாம்பியன்
- பெடரர் - நடால் மீண்டும் மோதல்
- ஆசியகோப்பை: இறுதிபோடடிக்கு இந்தியா
பகுதி:: விளையாட்டு

கொழும்பு ஜுலை 24:


