அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கேரட் அல்வா சுவையாய் செய்வது எப்படி?
Thursday, 29 November 2007
 இனிப்பு என்றால் விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுவும் அல்வா என்றால் கேட்கவே வேண்டாம்.

அப்படிப்பட்ட  சுவை மிகுந்த அல்வாக்களில் இன்று நாம் பார்க்கப்போவது கேரட் அல்வா. என்ன சொன்ன உடனேயே நாக்கில் எச்சில் ஊறுதா...? டிரை பண்ணி பாருங்க... பண்டிகை  பிறந்தநாள்  போன்ற விசேக நாட்களில் அசத்தி விடலாம்.

தேவையான பொருட்கள் :


பிஞ்சு கேரட்    : 250 கிராம்

சர்க்கரை      : ஒரு கப்

முந்திரி       : 10 அல்லது 15

பால்         : ஒரு கப்

நெய்         : 150 கிராம்

செய்முறை :

கேரட்டை நன்கு கழுவிவிட்டு  நன்றாக துருவி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பிஞ்சு கேரட்டை பயன்படுத்தினால் அல்வாவின் சுவை நன்றாக இருக்கும்.

வாணலியில் நெய் ஊற்றி  காய்ந்ததும் அதில் முந்திரிப் பருப்புகளை உடைத்து போட்டு சிவப்பாக வறுக்கவும்.

பிறகு  அதிலேயே காரட் துருவலையும் போட்டு சுருள வதக்கிக் கொள்ளுங்கள்.

இந்த கலவையின் மீது காய்ச்சிய பாலை ஊற்றி அதில் சிறிது நேரம் வேக விட வேண்டும். இப்போது சர்க்கரையைப் போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளற வேண்டும்.

கேரட்  அல்வா பதத்துக்கு வந்ததும் இறக்கி  நெய் தடவிய தட்டில் ஆற வைக்க வேண்டும்.

ஆறியவுடன் கேரட்டை சுவைத்துப் பாருங்கள். சுவையும் மணமும் தூள் கிளப்பும்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code