அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சுவையான பால்கோவா
Friday, 07 December 2007
இனிப்புகளில் எல்லோராலும் விரும்பப்படுவது பால்வகை இனிப்புகள்(milk sweets). அந்த வகையில் சுவை மிகுந்த பால்கோவா  எப்படித் தயாரிப்பது என்று இங்கே பார்ப்போம்.

தேவையானப் பொருட்கள்

மில்க் மெய்டு  :   1 டின் ( 500 கி )
தயிர்          :   125 கி
பால்           :   150 மி.லி
நெய்           :   100 கி
 
செய்முறை

ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் மில்க் மெய்டெய்யும், தயிரையும் போட்டு கட்டி சேராமல் கரைத்து வைத்துக் கொள்ள

வேண்டும். அதனுடன் பால் சேர்த்து இந்த கலவை அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். அப்போது, ஒரு மரக் கரண்டியால் கை விடாமல் தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

முதலில் கொஞ்சம் தண்ணியாகத்தான் இருக்கும். பிறகு,கொஞ்சம் கெட்டி ஆனவுடன் பாதி நெய்யை ஊற்றி கிண்டவும். சிறிது நேரம் கழித்து பால்கோவா பதம் வரும் முன்பு மீதி நெய்யை கொஞ்சம்,கொஞ்சமாக ஊற்றி கை விடாமல் கிண்ட வேண்டும். பால் கோவா நெய்யை கக்கும் பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விட்டால் சுவையான பால் மிருதுவான பால்கோவா ரெடி.


 


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code