அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சுவை கூட்டும் ரவா லட்டு
Tuesday, 23 October 2007

Rava ladduஇனிப்பை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் பண்டிகை வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு விதவிதமான இனிப்புகளை செய்து உங்கள் குழந்தைகளையும், உறவினர்களையும் மகிழ்வியுங்கள்.

செலவும் குறைவாகவும், மிகவும் எளிய முறையிலும் வீட்டில் தயாரிக்கும் இனிப்புகளில் லட்டும் ஒன்று. அதிலும் ரவா லட்டு செய்வது என்பது மிகவும் எளிது.

தேவையான பொருட்கள்

நெய் சேர்த்து வறுத்த ரவை          :   ஒரு கப்
சர்க்கரை                             :   அரை கப்
தேங்காய் துருவல்                    :   அரை கப்
ஏலக்காய் பொடி செய்தது             :   கால் ஸ்பூன்
நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி  :   5 முதல் 10
சூடான பசும்பால்                     :   அரை கப்


செய்முறை

இந்த வகை லட்டு செய்வது மிகவும் எளிது. மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும்(பாலைத் தவிர) ஒரு பாத்திரத்தில் இட்டு, அதில் கொஞ்சம் கொஞ்சமாக பாலை விட்டு சேர்த்துக் கலக்கவும்.

உருண்டை பிடிக்கும் அளவுக்கு கலவை ஈரமானால் போதும். இல்லையென்றால் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக் கொள்ளலம்.  இதனை லட்டு போல் உருண்டையாக பிடிக்கவும்.

மிக எளிதாகவும், வேகமாகவும் இந்த இனிப்பை செய்து தர முடியும்.  விடுமுறையில், பண்டிகையில் இருக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக செய்து கொடுக்க ஏற்றது இந்த லட்டு.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code