|
Friday, 08 February 2008 |
|
தேவையானவை 
தேங்காய் துருவல் - ஒன்றரை கப் பச்சரிசி - கால் கப் வெல்லம் - கால் கிலோ ஏலக்காய் - 4 முந்திரி - 6 திராட்சை - 10 நெய் - 2 தேக்கரண்டி உப்பு - அரை தேக்கரண்டி முதலில் வெல்லத்தை நன்கு நுணுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பச்சரியை நன்கு கழுவி தனியா ஊற வைக்க வேண்டும். ஏலக்காயை பொடியாக நுணுக்கி கொள்ள வேண்டும்.
இப்போது அரிசி நன்றாக ஊறிய பின்னர், அதனுடன் தேங்காய் துருவலைச் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அடிக்கவும். நைசாக ஆகும் வரை அடிக்கவும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.தண்ணீர் கொதித்ததும் அதில் மாவுக்கரைசலை போட்டு சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். ஓரளவு கொதி வந்தவுடன், இதில் ஏலக்காய் பொடி, நுணுக்கிய வெல்லம் ஆகியவற்றைப் போட்டு நன்கு கிளறவும். வெல்லம் கரையும் வரை கிளற வேண்டும். வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை இரண்டையும் போட்டு ஒரு நிமிடம் வறுத்து வைத்துக் கொண்டு, பாயாசம் பொங்கி வந்ததும் வறுத்த முந்திரி, திராட்சையை போட்டு இறக்கவும்.
இப்போது, சூடான சுவையான தேங்காய் பால் பாயாசம் தயார்.
பண்டிகையின் போதும், விருந்தினர்களுக்கும் பரிமாறி மகிழலாம்.
|