அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பட்டையக் கிளப்புது காமாட்சி மெஸ்
Thursday, 29 November 2007
-பழனியப்பன்-

 தலைப்பை பார்த்ததுமே ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் ! இது சாப்பாடு சம்பந்தமான விகயமாத்தான் இருக்கும்னு சட்டுனு கண்டுபிடிச்சிருப்பீங்க! ஆமாங்க உங்க கணிப்பு சரிதாங்க!

நீங்க எப்பாயவது பட்டுக்கோட்டைப் பக்கம் போனதுண்டா. போயிருந்தால் உங்களுக்குத் தெரியாம இருக்க வாய்ப்பில்லை.

தரணி போற்றும் தஞ்சை மாவட்டத்தில் பாட்டுக்கோட்டையாம் கல்யாணசுந்தரத்தை தந்த பட்டுக்கோட்டை, நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறச் செய்யும் காமாட்சி மெஸ்சையும் தநதுள்ளது.

மற்ற எல்லா மெஸ்களிலும் இல்லாத அதிசயம் இங்கு என்ன இருக்கப்போகிறது என்று நினைத்து விட வேண்டாம்.

இப்போதெல்லாம் பட்டுக்கோட்டைக்கு வரும் எந்த வெளியூர்வாசியும் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி சாலையில் அமைந்திருக்கும் காமாட்சி மெஸ்சுக்கு வந்து ஒரு பிடி பிடிக்காமல் போவதில்லை.

அரசியல்வாதிகள், தொழிலதிபதிபர்கள் என பெரும்புள்ளிகளும் இங்கு வந்துதான் தங்கள் மதிய பசிக்கு மருந்து போட்டுக் கொள்கின்றனர்.

அளவில்லாத சாப்பாடு அதனுடன் 10 வகை நான்-வெஜ் கிரேவி அல்லது குழம்பு இதுமட்டுமில்லாமல் கூட்டு பொறியல்,மோர், ஊறுகாய் என எல்லா அயிட்டங்களையும் கொடுத்து அசத்துகின்றனர். இத்தனை மெனுவிற்கும் எவ்வளவு கட்டணம் தெரியுமா ரூ.50 மட்டும்தான்.

மெனு விபரம் :

சிக்கன் கிரேவி
மட்டன் கிரேவி
காடை கிரேவி
நண்டு கிரேவி
இறால் கிரேவி
மூளை குருமா
நாட்டுக்கோழி குழம்பு
எலும்பு குழம்பு
கருவாட்டுக் குழம்பு
நாட்டுக்கோழி குழம்பு

செட்டி நாடு சிக்கனில் துவங்கி, மட்டன் சுக்கா, மலாய் மட்டன், மூளை ரோஸ்ட், நண்டு போன்லெஸ், காடை பிரை என வளர்ந்து கொண்டே போகின்றன சைடு டிஸ் வகையறாக்கள்.

இவைகளில் ஏதாவது ஒரு சைட் டிஸ் வாங்குபவர்களுக்கு மட்டுமே 10 வகை கிரேவி பரிமாறப்படுகிறது.

ஐந்து பேர் கொண்ட சமையல் குழுதான் இத்தனை வெரைட்டிகளையும் தயார் செய்கிறது. வாரத்தில் ஏழு நாளும் இயங்கும் இந்த மெஸ்சில் மதிய உணவு மட்டுமே ஸ்பெகல்.

இப்போது இந்த மெஸ்சிற்கு வயது ஒன்று முடிந்து விட்டது. கடந்தாண்டு துவக்கப்பட்ட இந்த மெஸ்சின் உரிமையாளர் ரஜினி என்ன சொல்கிறார்... நான் சாப்பாட்டு தொழிலில் கடந்த 15 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளேன். நானும், எனது குடும்பத்தினர் மட்டுமே காமாட்சி மெஸ்சை நடத்தி வருகிறோம்.

அருகிலுள்ள  கடலோரப் பகுதிகளான மல்லிப்பட்டினம், அதிராமப்பட்டினம் போன்ற இடங்களுக்குச் சென்று மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவு வகைகளை தினமும் வாங்கி வருகிறேன். 

அதனால்தான் உணவு வகைகளை சுவையாகவும், நயமாகவும் கொடுக்க முடிகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் பட்டுக்கோட்டையைப் பொறுத்தவரை கஸ்டர் நாக்கை நாங்கள்தான் குத்தகைக்கு எடுத்துள்ளோம், என்கிறார் கர்வமாக.

இந்த மெஸ் அமைந்திருப்பது சிறு குடிசையானாலும், சுவையிலும், தரத்திலும் கோபுரத்தின் உச்சிக்கே கொண்டு செல்கிறது என்கிறது இந்த உணவகத்தின் சுவையறிந்தவர்கள்.

எவ்வளவுதான் டெக்னாலஜி வளர்ந்து விட்டாலும், பாரம்பரிய உணவு வகைகளுக்கு இருக்கும் மதிப்பே தனிதான். அதை நன்கு தெரிந்து வைத்துள்ள ரஜினி, மீன்குழம்பு, போன்ற ஒருசில கிரேவி அயிட்டங்கள் இப்போதும் பானையில்தான் தயாரிக்கிறார். இதற்கு விறகு அடுப்பைத்தான் பயன்படுத்துகிறார்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு - என்கிறார் வான்புகழ் கொண்ட வள்ளுவர்.

அதாவது, வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்று போற்றுவராம்.

அப்படித்தான் காமாட்சி மெஸ்சிலும் வந்து சாப்பிட்டு செல்பவர்கள் மனங்குளிர்ந்து அவர்களை வாழ்த்திச் செல்கின்றனர்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code