அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
2007ம் ஆண்டிற்கான நோபல் பரிசை வென்றவர்கள்
Thursday, 29 November 2007

 சுவீடனைச் சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற அறிவியல் விஞ்ஞானியின் நினைவாக இந்த நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.  அக்டோபர் 21,1883ம் ஆண்டு சுவீடனின் ஸ்டாக்ஹோல்மில் பிறந்த ஆல்பிரட் நோபல் சிறந்த வேதியல், பொறியாளராகவும், புதுமைகளைப் படைக்கும் பன்முகத் தன்மையோடு விளங்கினார். இவர் அப்போதே போபர்ஸ் பீரங்கிகளை சொந்தமாகத் தயாரித்தார்.

டைனமைட் என்ற புதிய வெடிபொருளை முதல் முறையாக கண்டுபிடித்தார். இவரது இந்த கண்டுபிடிப்புக்கு லண்டனில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அறிவியல் விஞ்ஞானியாக மட்டுமில்லாது, சிறந்த புத்தக எழுத்தாளராகவும் நோபல் விளங்கி பல்வேறு அறிவியல் புத்தகங்களை எழுதியுள்ளார்.

அறிவியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசளித்து கவுரவப்படுத்த வேண்டும், என நோபல் சாகும் தருவாயில் கேட்டுக் கொண்டார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோபல் 1896ம் ஆண்டு டிசம்பர் 10ம் நாள் இத்தாலியில் இயற்கை எய்தினார். நோபல் இறக்கும் பொழுது அவர் விட்டுச் சென்ற சொத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 42 லட்சத்து 23 ஆயிரத்து 550 அமெரிக்க டாலர்கள். இது நோபல் இறக்கும் போது அதன் மதிப்பு.

இந்த நிதியைக் கொண்டே இன்றும் ஆல்பிரட் நோபலின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அவர் இறந்த தினமான டிசம்பர் 10ல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து துறைக்குமான பரிசுகள் ஸ்டாக்ஹோல்மிலும், அமைதிக்கான பரிசு மட்டும் ஓஸ்லோவிலும் வழங்கப்படும்.

இயற்பியலுக்கான நோபல் பரிசு

ஆல்பெர்ட் வெர்ட்(பிரான்ஸ்) மற்றும் பீட்டர் குருன்பெர்க்(ஜெர்மனி) ஆகியோர் இந்தாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை தட்டிச் சென்றுள்ளனர்.

இந்த இருவரும் இணைந்து 1988ல் மாபெரும் காந்தமின்தடைமம்(ஜெயன்ட் மாக்னட்டோ ரெசிஸ்டன்ஸ் (அ) ஜிஎம்ஆர்)) என்ற புதிய இயற்பியல் விளைவைக் கண்டுபிடித்தனர். இந்த விளைவின் மூலம் ஹார்ட் டிஸ்கின் நினைவகங்களில்(மெமரி) உள்ள தகவல்களை(டேட்டா) நாம் படிக்க முடியும். இன்று கணினிகளில் நாம் பயன்படுத்தும் கிகாபைட் மெமரியாக உபயோகப்படுத்தப்படுகிறது.  இதற்காக இவ்விருவருக்கும் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

ஆல்பர்ட் வெர்ட் : பிரான்ஸைச் சேர்ந்த இவர், பிரான்சில் ஆர்சே என்னுமிடத்தில் உள்ள தென் பாரிஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

பீட்டர்குருன்பெர்க் :  மே, 18, 1939ல் செக் குடியரசில் பில்சென் எனும் ஊரில் பிறந்த குருன்பெர்க் ஐரோப்பாவின் ஜோலிக் ஆய்வு மையத்தில் சேர்ந்து பல்லடுக்கு இரும்பு சேர்ந்த மென்படலத்தின் காந்தப் பண்புகள் பற்றிய ஆய்வில் சிறந்து விளங்கி பின்னர் ஓய்வு பெற்றார்.

 

 

 வேதியலுக்கான பரிசு

ஜெர்மனைச் சேர்ந்த ஜெர்ஹார்டு எர்ட்டில் இந்தாண்டு வேதியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ளார். ஓசோன் படத்தில் ஏற்படும் துளை குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் இவர் மேற்கொண்ட ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

 இவரது ஆய்வின் மூலம் இரும்பு துருபிடிப்பது ஏன் என்பது குறித்தும், திடப் பொருட்களின் புறப்பரப்புகளில் வேதி வினை நிகழ்வது குறித்தும் இவரது ஆய்வு விவரிக்கிறது என இவருக்கு பரிசை அறிவித்துள்ள நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

ஜெர்ஹார்டு எர்ட்டில் : ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் அக்டோபர் 10,1936ல் பிறந்த இவர் ஒரு இயற்வேதியல் அறிஞர். இவர் புகழ்பெற்ற மாக்ஸ் பிளாங்க் கெசெல்காவட்டின் விரிட்ஸ் ஹாபர் கல்வி நிறுவனத்தில் இயற்வேதியல் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

 

 

 

 

 

 

இலக்கியத்துக்கான பரிசு

இந்தாண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை பிரிட்டனைச் சேர்ந்த டோரிஸ் லெஸ்சிங் என்ற 87 வயது எழுத்தாளர் தட்டிச் சென்றுள்ளார்.




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code