| ஆபத்தாகும் அழகு ... பெண்களே உஷார் ! |
| Friday, 30 November 2007 | ||||
|
-சி.ஜே.ரவிக்குமார்- அழகை விரும்பாதவர்கள் யாரும் இருக்கிறார்களா...? என கூகுளில் தேடினாலும் யாரும் கிடைக்க மாட்டார்கள். அதிலும் தான் அழகாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, கண்ணாடி முன் மணிக்கணக்காய் தவமிருக்கும் மாதர்கள் எத்தனை..எத்தனையோ நம் நாட்டினிலே. உங்கள் புறஅழகை மிகைப்படுத்த, நவீன அழகு சாதனங்களை பயன்படுததுபவர்கள் நீங்கள் என்றால்... கட்டாயம் உங்களுக்குத் தான் இந்த கட்டுரை. லிப்ஸ்டிக், பேஸ் கிரீம், போன்ற பொருட்களை உபயோகிப்பதால் மங்கையர்களின் அழகு பலமடங்கு அதிகரிக்கிறது என்று பலரும் நம்புகின்றனர். இத்தகைய செயற்கை பொருட்களினால் அழகு கூடுகிறதோ இல்லையோ, ஆபத்து நிச்சயம். ![]() அழகு கூட்டும் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன் அப்பொருட்களின் திரைமறைவில் இருக்கும் ரசாயன பொருட்கள் குறித்து நம்மில் எத்தனை பேர் யோசித்தது உண்டு. உயிர்வேதியல் அறிஞ்ர் ரிச்சர்ட் பென்ஸ் என்பவர் இது குறித்து என்ன சொல்கிறார் தெரியுமா? பெண்களில் பெரும்பாலானவர்கள் லிப்ஸ்டிக் உபயோகிப்பது உண்டு. அப்படி உபயோகிக்கும் போது, அதிலுள்ள பாரானன்ஸ் என்ற ரசாயனப் பொருள் வெளிப்புற தோல் மூலமாக நேரடியாக ரத்தத்தில் கலந்து விடுகிறது. இது சில நேரங்களில் புற்று நோயையும் ஏற்படுத்தும் வல்லமை வாய்ந்தது, என்கிறார் அதிர்ச்சியாக. பெண்களில் பலர் ஒரு நாளுக்கே 20க்கும் மேற்பட்ட அழகு பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. மற்றொரு ஆய்விலோ, பத்தில் ஒன்பது பெண்கள் தெரிந்தோ, தெரியாமலோ காலவதியான அழகுப் பொருட்களையே பயன்படுத்துகின்றனராம். இது தரும் பக்க விளைவு கொஞ்சம் நஞ்சமல்ல. இயற்கை தரும் அழகுப் பொருட்கள் எத்தனையோ நம்மிடையே இருக்க, செயற்கையான அழகுப் பொருட்களை தேடி ஏன் நாம் அலைய வேண்டும். சிந்தியுங்கள் பெண்களே!
Write Comment |
||||
மற்றவை
- வேறு கிரகத்துப் பெண் பூமிக்கு வருகையா?
- நீங்கள் உற்சாகமானவரா...?
- சர்வதேச மகளிர் தினம்
- பில்கேட்சை முந்தினார் பப்பெட்
- குரங்கு கையில திருமணமாலை
- தமிழுக்கு வெற்றி
- புகை மனித உயிருக்கு பகை
- ...ஆதலினால் காதல் செய்வீர்!
- பங்கு பரிவர்த்தனையில் 'ரிலையன்ஸ்பவர்'
- சமூக சேவகர் பாபா ஆம்தே காலமானார்
பகுதி:: இது வஜ்ரம் ஸ்பெஷல்

அழகை விரும்பாதவர்கள் யாரும் இருக்கிறார்களா...? என கூகுளில் தேடினாலும் யாரும் கிடைக்க மாட்டார்கள். 



