அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
'ஸ்டிப்ளிங்' ஓவிய நாயகி கயல்
Friday, 30 November 2007


-பிரமிளா. எம்.கே-

 பள்ளிப் படிப்பு முடிந்ததும், பிரெக்காக டீன் ஏஜை கொண்டாட வேண்டும் என்பது பெரும்பாலோரின் கனவு.. ஆனால், கோவை ரேஸ் கோர்சைச் சேர்ந்த கயலின் கனவோ சற்று வித்தியாசமானது.

புள்ளி வைத்துக் கோலம் பெண்கள் மத்தியிலே, பள்ளிப் படிக்கும் போதே முழுக்க முழுக்க புள்ளிகளால் ஆன ஸ்டிப்ளிங் ஆர்ட் எனப்படும் ஓவியக் கண்காட்சியை நடத்த வேண்டும் என கனவு கண்டார். அந்த வண்ணக் கனவை இப்போது பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டில் நிறைவேற்றி விட்டார்.

அதென்ன ஸ்டிப்ளிங் ஓவியம்...? வண்ணங்களால் ஆனதுதான் ஓவியம் என்பது நம்மில் பலரது கணிப்பு. இந்த கணிப்புகளை பொய்யாக்கும் வகையில் வண்ணப் புள்ளிகளால் சிறிதும் பெரிதுமாக கவனமுடன் நேர்த்தியாக உருவாக்கப்படும் ஓவியங்களே ஸ்டிப்ளிங் ஓவியங்கள்

தற்போது அதி வேகமாக பிரபலமாகி வரும் இந்த வகை ஓவியத்தை,  வண்ணப் புள்ளிகளைக் கொண்டு குறைந்த நேரத்தில் நேர்த்தியாக உருவாக்கி விட முடியும் என்பதுதான் இதன் தனிச் சிறப்பு.

சரி... சரி விகயத்திற்கு வருவோம்!

சுமார் 20க்கும் மேற்பட்ட ஸ்டிப்பிளிங் வகை ஓவியங்கள் இடம்பெற்ற கண்காட்சி, சமீபத்தில் கோவையில் நடந்தது. கண்காட்சியின் கதாநாயகியாய் உலா வர வேண்டிய கயல், அதை விரும்பாமல் சாதரண பார்வையாளராய், தனது ஓவியங்களை அங்குலம் அங்குலமாக கண்களால் அளந்து கொண்டிருந்தார்.

அவரை நாம் நெருங்கிய போது, ஓவியங்களில் உள்ள ஆவேசம் துளியும் முகத்தில் காட்டாமல், மவுனப் புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு நம்மிடம் மனம் திறந்தார்.

முதலில் காமிக்ஸ் புத்தகங்களில் இடம்பெற்ற ஓவியங்களையும், கார்ட்டூன்களையும் பார்த்து வரையத் துவங்கினேன். மற்ற பொழுதுபோக்குகளை விட இதில் நேரத்தை செலவிடுவதை பெரிதும் நான விரும்புகிறேன்.

முறையா ஓவியம் கத்துக்கிறேனு என் பெற்றோரிடம் பெட்டிகன் போட்டேன்.  எனது ஓவிய ஆர்வத்தை நேரில் பார்த்த எனது பெற்றோர், உடனடியாக ஓகே சொன்னார்கள்.

பத்தாம் வகுப்பில் பள்ளிக்கூட நேரம் போக, மீதி நேரத்தில் கோவை லலித் கலா சேத்திராவில் டிராயிங் கோர்ஸ் சேர்ந்தேன், என்றார்.

 இது மாடர்ன் ஆர்ட் சார்! இது வாட்டர் கலர்ஸ் பயன்படுத்தி பண்ணின பெயின்டிங் என கண்காட்சியைக் காண வந்தவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார் கயலின் தந்தை கண்ணன்.

நம்மைப் பார்த்ததும்  பரவசமானவராய், கயலின் விருப்பம் தெரிந்ததும் அதற்கு ஏற்ற குருவை தேடினோம். லலித் கலா சேத்திரா ஆசிரியர் ரவிராஜன், இவரது திறமைக்கு நல்ல தீனி போட்டார். அவரது தொடர் பயிற்சியின் மூலம் கூர் தீட்டினார். கோவையில் முதன் முதலாக ஸ்டிப்பிங் ஆர்ட்ஸ் கண்காட்சியை நடத்தியவளின் அப்பா என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றார் பூரிப்பாக.

தினமும் குறைந்த பட்சம் ஆறு மணி நேரமாவது பெயின்டிங்கில் செலவிடும் கயல், வரையப் போகும் ஓவியம், அதற்கு உழைக்கப்போகும் நேரம் என திட்டமிட்டு அட்டவணை தயார் செய்து கொள்கிறார்.

என் இலக்கை அடைய அட்டவணை தேவை, ஒவ்வொரு மணித் துளியிலும் நான் கவனமாக புள்ளிகளுடன் விளையாடுகிறேன், என்று சொல்லும் கயல், சமூக அக்கறையுள்ள ஒவியராவதே எனது லட்சியம் என்கிறார் உறுதி பட.

           நாம் நம் செயல்களைத் தீர்மானிக்கிறோம்
             நம் செயல்கள் நம்மைத் தீர்மானிக்கின்றன - என்றார் ஆங்கிலக் கவிஞர் எலியட்.

அதுபோலத்தான், கயலின் இன்றைய செயலும், சிந்தனையும் உழைப்பும் நாளை அவரை உயரே பறக்கச் செய்யும் என்பது மட்டும் உறுதி.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code