| ரோபோவிற்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி |
| Monday, 19 May 2008 | ||||
பிரமாண்ட வெற்றியை நோக்கி அமைதியான வேகத்துடன் செயல்பட்டுவருகிறது ரோபா...படத்தில் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் வேலைகள் அதிகம் இருப்பதால் அதில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஒரு டீம் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளது. சில நாட்களில் ஷங்கரும் ரஜினியும் அமெரிக்கா செல்கிறார்கள். இந்தப் பயணம் இளமை ரஜினியை திரையில் கொண்டு வருவதற்காக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவாஜியில் அழகுக்கலை நிபுணர்களும் காஸ்ட்லி அழகுச் சாதனங்களும் ரஜினியின் வயதை கணிசமாக குறைத்து காட்டின. ரோபோவில் இன்னும் குறைய வேண்டுமாம் அதற்காகவே இந்த அமெரிக்கப் பயணம். ரஜினி படத்தில் இதுவரையில்லாத அளவுக்கு கெட்டப் சேஞ்ச் பண்ணுகிறாராம். கதைக்காகவே இந்த மாற்றம். அமெரிக்காவில் ஹாலிவுட் கலைஞர்களின் கைவண்ணத்தில் ரஜினியின் தோற்றம் மாறப் போகிறது. ஒருவகையில் இந்த பயணம் ஒரு பொட்டோசெஷன் ஆக இருக்கலாம்.
Write Comment |
||||

பிரமாண்ட வெற்றியை நோக்கி அமைதியான வேகத்துடன் செயல்பட்டுவருகிறது ரோபா...


