| தசாவதாரம்: ஐகோர்ட்டில் பட அதிபர் மனு |
| Wednesday, 21 May 2008 | ||||
பத்மஸ்ரீ கமல்ஹாசன் நடித்துள்ள தசாவதாரம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இன்டர் நேஷனல் ஸ்ரீவைஷ்ணவ தர்மா சம்ரக்ஷணா சங்க தலைவர் கோவிந்த ராமானுஜதாசர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் வைஷ்ணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே இச் சர்ச்சைகுறிய காட்சியை நீக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.இவ்வழக்கை தள்ளுபடி செய்யவேண்டுமென்று இப்படத்தின் டைரக்டர் கே.எஸ்ரவிக்குமார் மத்திய தணிக்கை குழுவும் ஏற்கனவே மனு தாக்கல் செய்தன. இப்படம் மத உணர்வை பாதிக்கும் வகையிலோ மோதலை ஏற்படுத்தும் வகையிலோ அமையவில்லை என்று பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது. இப்படத்தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் பதில் மனுவில்... பொதுநலன் என்ற பெயரில் இலவசமாக விளம்பரத்தை தேடவும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கவும் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் இந்த படத்திற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். இப்படம் கடவுளின் நம்பிக்கையை அடிப்படையாகவும் உள்ளதாகவும் மனுதாரரின் விருப்பப்படி காட்சிகளை மாற்றியமைக்க வேண்டுமென்று கேள்வி எழுப்ப முடியாது. இப்படத்தை மனுதாரர் பார்க்காமலே கற்பனை அடிப்படையிலும் யூக அடிப்படையிலுமே குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும் இப்படத்தை திரைப்படத்தை பொதுமக்களுக்கு திரையிட அனுமதி வழங்குவதோ மறுப்பதோ மத்திய சினிமா தணிக்கை குழுவுக்கு தான் அதிகாரம் உள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் இந்த படத்தை தயாரிக்க ரூ. 100 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் படத்தின் தாமதமானால் தினசரி ரூ. 2 கோடி இழப்பீடு ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும் 1000 பட பிரதிகள் எடுக்க 15 நாட்கள் ஆகும் என்றும் ஆகவே இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி வாதாடினார். பின்னர் வக்கீல்களின் விவாதத்திற்கு பிறகு இவ்வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Write Comment |
||||

பத்மஸ்ரீ கமல்ஹாசன் நடித்துள்ள தசாவதாரம் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் இன்டர் நேஷனல் ஸ்ரீவைஷ்ணவ தர்மா சம்ரக்ஷணா சங்க தலைவர் கோவிந்த ராமானுஜதாசர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில் வைஷ்ணவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே இச் சர்ச்சைகுறிய காட்சியை நீக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.


