அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
ரோபோ வழி தனி வழி
Saturday, 24 May 2008
 ரோபோவின் ஆரம்பகட்ட தயாரிப்புகளை கேட்டாலே தலை கிர்ரடிக்கிறது...

நூதனமுறையில் கிராபிக்ஸ் வேலைகளை கற்றுக்கொள்ள ஒரு டீம் அமெரிக்கா சென்றுள்ளது. பொதுவாக ஒரு படத்தின் கிராபிக்ஸ் வேலைகளை பிற நிறுவனங்களிடம் கொடுத்து செய்வார்கள். ரோபோ வேறு மாதிரி.

ஒரேயிடத்தில் ரோபோவின் கிராபிக்ஸ் முதல் பிராசஸிங்வரை அனைத்து வேலைகளையும் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதற்காக ஜெமினி லேப் தயாராகி வருகிறது.

இங்கு ரோபோ பணிகளுக்கென்றே தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளி ஆட்களுக்கு மட்டுமின்றி பட்சத்தில் பணிபுரியும் பி கிரேட் நபர்களுக்கும் இதன் உள்ளே அனுமதி கிடையாதாம்.

படத்தில் சின்ன செய்தி முதல் ஒரு ஸ்டில்வரை வெளியே போகாமலிருக்கவே இந்த ஏற்பாடு. அமெரிக்காவிலிருந்து அதிநவீன கணிணிகளை பொருத்தும் பணி தற்போது நடந்து வருகிறதாம்.

படம் முடிவதற்குள் ஒரு மினி ஹாலிவுட் உருவானாலும் ஆச்சரியமில்லை.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code