| தமிழில் டப்பிங் பேச தமன்னா விருப்பம் |
| Tuesday, 27 May 2008 | ||||
தமிழில் டப்பிங் பேச விரும்புவதாக தமன்னா கூறியிருக்கிறார்...இந்தியில் சான்த் சா ரோஷன் செஹ்ரா தெலுங்கில் ஸ்ரீ தமிழில் கேடி என மூன்று மொழிகளில் நான் நடித்த முதல் படங்கள் தோல்வி அடைந்தன. ஹேப்பி டேஸ் தெலுங்கு படத்துக்கு பின்பே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்த வெற்றிக்கு காரணம் இயக்குனர் சேகர் காம்லாவுக்கு நன்றி. நடிக்காமல் எளிமையாக காட்சிகளில் ஒன்றிவிட வேண்டும் என்று சேகர் கூறிவார். அதே போல செய்ததால் பாராட்டு கிடைத்திருக்கிறது. அதை பின்பற்றி கல்லூரி படத்தில் அந்த நல்ல பெயரை தக்கவைத்தேன். மேலும் தற்போது அயன் ஆனந்ததாண்டவம் படிக்காதவன் படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் சித்தார்த் அல்லு அர்ஜுன் ஜோடியாக இரு படங்களில் நடிக்கிறேன். அடுத்த தெலுங்கு படத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேசுகிறேன். இதற்காக தெலுங்கு கற்று வருகிறேன். தமிழிலும் டப்பிங் பேச ஆசை. விரைவில் அந்த ஆசையும் நிறைவேறும் என நம்புகிறேன் என்றார்.
Write Comment |
||||

தமிழில் டப்பிங் பேச விரும்புவதாக தமன்னா கூறியிருக்கிறார்...


