அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
தசாவதாரம் பார்க்கும் ஜார்ஜ் புஷ்
Wednesday, 28 May 2008
 உலக நாயகன் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து வெளிவரவிருக்கும் தசாவதாரம் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பார்ப்பதற்காக வசதியாக ஆங்கில சப் டைட்டிலுடன் அவருக்கு அனுப்பி வைக்கவுள்ளனராம்.

இதையடுத்து தசாவதாரம் பற்றிய பெரும் பரபரப்பு நிலவுகிறது. கமலஹாசன் ஜோயடிக அசின் மல்லிகா ஷெராவத் மற்றும் ஹேமமாலினி ஜெயப்பிரதா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நெப்போலியனுக்கு படத்தில் முக்கிய வேடம். படத்தை சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரியம் வெகுவாக பாராட்டியது. முக்கியமாக மல்லிகா ஷெராவத் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி தணிக்கை வாரிய உறுப்பினர்களை அதிர வைத்ததாம்.

எனவே அந்த பாடலில் வரும் 9 இடங்களில் மல்லிகாவின் அசைவுகள் சற்று ஆபாசமாக உள்ளது. அவற்றை வெட்ட வேண்டும் அப்படிச் செய்தால் படத்திற்கு யு சான்றிதழ் தரலாம் கூறியதையடுத்து உடனே அக்காட்சியை நீக்கிவிட்டனர்.

இப்படம் ஜுன் 6ம் தேதி உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் திரைக்குக்கொண்டு வர தயாரிப்பாளர் தரப்பு மும்முரமாக உள்ளது.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code