|
பக்கம் 1 / 2
வி.பு. இயக்க தளபதி பால்ராஜ் மரணம்
விடுதலைப்புலிகளின் சார்லஸ் ஆன்டனி படைபிரிவின் தளபதியாக 1993ம் ஆண்டு முதல் 1997 ம் அண்டு வரை பணியாற்றியவர் பிரிகேடியர் பால்ராஜ். இவர் கடந்த 3 மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக வன்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு அவருக்கு நேற்ற திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. பிரிகேடியர் பால்ராஜ் மரணத்துக்கு அங்கு 3 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
மூத்த தளபதிகளில் ஒருவரான இவர் 2000ம் ஆண்டு யானை இரவு பகுதியில் சிங்கள ராணுவத்தை விரட்டியடித்ததிலும் கடற்புலிகள் பிரிவை வலிமையானதாக உருவாக்கியதிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இவர் பல்வேறு நவீன யுக்திகைள கையாண்டு சிங்கள ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
---
சீன பூகம்பம்: 77 பேர் உயிருடன் மீட்பு
சீன பூகம்பத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி கிடந்த 77 பேர் கடந்த 2 நாட்களில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
சீன பூகம்பத்தில் பலியாணவர்கள் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு ராணுவத்தினரும், வெளிநாட்டு மீட்பு குழுவினரும் இதில் ஈடுபட்டுள்ளவருகின்றனர்.
பூகம்பம் ஏற்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் இப்போதும் இடிபாடுகளுக்குள் சிலர் உயிருடன் இருக்கிறார்கள். அவர்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மீண்டும் 77 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
பூகம்ப நிவாரண பணிக்காக இதுவரை ரூ. 65 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பூகம்பாதித்த பகுதிகளில் பல அணைகள் இருந்ததால் அவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அவை தற்போது உடையும் நிலை ஏற்பட்டள்ளது. எனவே அதன் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள சுமார் 21 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
---
இலங்கை திருப்ப கருணா விருப்பம்
போலி பாஸ்போர்ட் மூலம் லண்டன் வந்து சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் தளபதி கர்ணா தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் இயக்கததின் கிழக்குப் பகுதியின் தளபதியாக இருந்தவர் கர்ணா. இவர் பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் 2004 பிரிந்து புதிய பிரிவை உருவாக்கினார்.
இவர் தனது புதுப்பிரிவை உருவாக்கிய கருணா அரசுடன் சேர்ந்து செயல்பட ஆரம்பித்தார். இதனால் விடுதலைப்புலிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
கடந்த நம்வம்பர் மாதம் 3ம் தேதி திடீரென லண்டனில் கைது செய்யப்பட்டார் கருணா. அவர் மீது போலிபாஸ்போர்ட் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 9 மாதங்களாகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறையில் இருந்தபோது இங்கிலாந்தில் அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் தற்போது தனது நிலையை மாற்றிக் கொண்டு இலங்கைக்கே தன்னைத் திருப்பி அனுப்புமாறு விண்ணப்பித்துள்ளாராம் கருணா.
இந்நிலையில் அவரது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு முழுக்க முழுக்க பிள்ளையான் வசம் போய்விட்டது. தற்போது அவர் கிழக்கு மாகாண முதல்வராகவும் ஆகிவிட்டார்.
பிள்ளையான் குழுவினர் முற்றிலும் கருணாவுக்கு எதிராக உள்ளனர். அரசும் பிள்ளையான் குழுவுக்கு ஆதரவாக உள்ளது.
எனவே இச்சூழ்நிலையில் கருணாவை இலங்கைக்கு அணுப்புவது குறித்து பரிசீலிப்பதாக தெரிகிறது.
---
பிரபாகரனுக்கு அமெரிக்க தூதர் கருத்து
இலங்கையில் அமைதி ஏற்பட தமிழ் ஈழ கோரிக்கையை பிரபாகரன் கைவிட வேண்டும் என்று அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழர்களிடம் தமிழ் ஈழம் பற்றி கருத்து கேட்கையில் பெரும்பாலானோர் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்றுதான் கருதுகிறார்கள்.
எனவே இலங்கையில் அமைதி ஏற்பட பிரபாகரன் தனது தமிழ் ஈடு கோரிக்கையை கைவிட்டு இலங்கை அரசுடன் பேச்சு நடத்த முன் வரவேண்டும். இதுவே 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பிரச்சனை தீர ஒரே வழி. இதை நான் அவருக்கு வேண்டுகோளாக விடுக்கிறேன் என்றார்.
---
பீனிக்ஸ் செவ்வாயில் தரை இறங்கியது
அமெரிக்க விண்கலம் பீனிக்ஸ் செவ்வாய்க்கிரகத்தில் நேற்று தரைஇறங்கியது. பீனிக்ஸ் தரையிரங்கியதும் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு தகவல் அணுப்பியது. இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
பீனிக்ஸ் வின்கலம்:
பூமியைத்தாண்டி செவ்வாய்கிரகத்தில் உயிரினம் வாழும் சூழ்நிலை உள்ளதாக கருதப்படுகிறது. அங்கு தண்ணீர் உறைந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே செவ்வாய் கிரக ஆய்வுகளில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது.
செவ்வாய் கிரகத்தின் தென் பகுதியில்தான் பெருமளவில் இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது ஆய்வு மேற்கொள்ளப்படாமல் இருக்கும் வட துருவத்தில் முழுமையான ஆய்வை நடத்த பீனிக்ஸ் என்கிற அதி நவீன விண்கலத்தை நாசா வடிவமைத்தது. இதனை செவ்வாய் கிரகத்தில் சென்று ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஆகஸ்ட் 4ம் தேதி பீனிக்ஸ் அனுப்பப்பட்டது.
இது தன் நீண்டதூர 10 மாத பயணத்திற்குப் பின்னர் சுமார் 422 மில்லியன் மைல்களைக் கடந்து செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் நேற்று 12000 மைல் வேகத்தில் பீனிக்ஸ் தரையிறங்கியது.
செவ்வாய்கிரகத்தில் பீனிக்ஸ் தரையிரங்கியதும் தரைக்கட்டுப்பாட்டில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் பெருமகிழ்ச்சியடைந்தனர்.
இந்த விண்கலம் அது தரையிரங்குவதற்கு தேர்ந்து எடுக்கப்பட்ட இடம் சுமார் 48 கி.மீ. அகலம் உள்ள பள்ளத்தாக்கு ஆகும். கிரகம் முழுவதும் பனிக்கட்டிகளால் சூழப்பட்டிருப்பதால் அவற்றின் உறைதண்மையையும் அவற்றின் முந்தைய நிலை பனிக்கட்டிகள் உருகுவதற்கான வாய்ப்பு உள்ளதா மனிதர்கள் வசிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா போன்ற பல்வேறு ஆய்வுகளை சுமார் 3 மாதங்களுக்கு இங்கு நடத்தவுள்ளன.
---
குடியரசு நாடானது நேபாளம்
நேபாளத்தில் 240 ஆண்டுகளாக இருந்த மன்னராட்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு நேற்று முதல்முறையாக கூடிய நாடாளுமன்றம் நேபாளத்தை குடியரசு நாடாக அறிவித்தது. இதையடுத்து மாவோ இயக்கத்தை சேர்ந்த பிரசந்தா பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இமயமலைத்தொடரில் அமைந்துள்ள நாடான நேபாளம் உலகின் ஒரே இந்து நாடாக அறியப்பட்டது. மன்னராட்சி நடந்து வந்த நேபாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரும் போராட்டம் வெடித்தது. மாவோயிஸ்ட்டுகள் தலையைல் நடந்த இந்தப் போராட்டத்தின் விளைவாக அங்கு ஜனநாயகம் மலர்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து மன்னர் ஞானேந்திரா அரண்மனையைவிட்டு குடும்பத்துடன் வெளியேற 15 நாள் அவகாசம் கொடுத்து தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மன்னராட்சிக்கு முடிவுக்கு கொண்டு வரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 560 பேரும் எதிராக 4 பேரும் வாக்களித்தனர். நேற்றைய கூட்டத்தில் மொத்தம் உள்ள 601 உறுப்பினர்களில் 565 பேர் கலந்து கொண்டனர். இன்னும் 26 நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து குடியரசாக நேபாளம் பிரகடனம் செய்யப்பட்டதையடுத்து காத்மாண்டுவில் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
|