| திருமணம் எப்போது? ஷில்பாஷெட்டி |
| Tuesday, 03 June 2008 | ||||
தொழிலதிபரை காதலிப்பதாக வந்த செய்தியை ஆமோதித்துள்ள ஷில்பாஷெட்டி திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு மனம் திறந்த பதிலளித்துள்ளார்.புகழின் உச்சியில் உள்ள ஷில்பா ஷெட்டி. சமீபகாலமாக லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் குந்தரா உடன் சுற்றி வருகிறார். இந்தியரான ராஜ் குந்தரா ஷில்பா உடன் பழகுவதை விரும்பாமல் அவரது மனைவி விலகிவிட்டார். இதனால் ராஜ்குந்தராவை திருமணம் செய்வது குறித்த தகவல்களுக்கு இதுவரை மழுப்பலாகவே பதிலளித்து வந்த ஷில்பா இங்கிலாந்தில் என்னுடைய பணிகளை மேற்கொள்தற்காக உதவி செய்யும் நண்பராக இருக்கிறார் என்றே கூறிவந்தார். ஆனால் தற்போது தொழிலதிபர் மீது கொண்ட காதலை ஷில்பா ஷெட்டி தற்போது ஒப்புக் கொண்டு இருக்கிறார். அவர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர். அவருடன் எனக்குள்ள உறவு குறித்து பேசுவது மிக மிக தனிப்பட்ட விஷயம். அவர் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமானவர். எங்களுடைய திருமணம் எப்போது எங்கே எந்த நேரத்தில் நடைபெறும் என்று அனைத்து விபரங்களையும் என்னால் இப்போது கூற முடியாது. ஆனால் சரியான நேரம் வரும்போது நானே என்னுடைய திருமணம் குறித்து அறிவிப்பேன் என்றார். தவறான காரணங்களுக்காக த்திரிகைகளால் நான் பலிகடா ஆக்கப்பட்டு விட்டேன். ஆனால் என்னைப் பற்றி சர்ச்சைகள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போகும்போது அதை பத்திரிகைகள் குறிப்பிடுவது இல்லை என்றார்.
Write Comment |
||||

தொழிலதிபரை காதலிப்பதாக வந்த செய்தியை ஆமோதித்துள்ள ஷில்பாஷெட்டி திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு மனம் திறந்த பதிலளித்துள்ளார்.


