அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
அமெரிக்க தியேட்டரில் சினேகா முற்றுகை
Wednesday, 04 June 2008
 நடிகை சினேகா நடித்த பாடி படம் தற்போது ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் லாரன்சுடன் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டது ஹைலைட் ஆக பேசப்படுகிறது. அடுத்து அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னாவுடன் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஒரு வாரத்துக்கு முன்பு அங்கு புறப்பட்டு சென்றனர். பிரசன்னா சினேகா நடித்த காட்சிகள் நியூஜெர்சியில் பல்வேறு இடங்களில் பட மாக்கப்பட்டன.

இதற்கிடையில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அருகில் உள்ள தியேட்டரில் பாடு ரங்கா என்ற தெலுங்கு படம் ஓடுவதாக சினேகா அறிந்தார். இப்படத்தில் அவரும் பாலகிருஷ்ணாவும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பக்தி படமாகும். ஆந்திராவில் சக்கை போடு போடுகிறது.

பின்பு அவர் அருகிலுள்ள தியேட்டரில் படம் பார்க்க சென்று ரசிகர்களுடன் ஓரமாக உட்கார்ந்து படம் பார்த்தார்.

ரசிகர்களின் கைத்தட்டலையும் விசில் சத்தத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது சினேகா தியேட்டருக்கு வந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பரவியது. இதனால் சினேகாவின் இடத்துக்கு சென்று ரசிகர்கள் முற்றுகையிட்டனர். மேலும் சிலர் ஆட்டோகிராப் கேட்டனர். இதனால் கூட்டம் கூடியதால் சமாளித்து சினேகா அங்கிருந்து காரில் புறப்பட்டுச்சென்றார்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code