| தசாவதாரம் தொடரும் சாதனைகள் |
| Friday, 06 June 2008 | ||||
படம் வெளிவருவதற்கு முன்பே தசாவதாரத்தின் இமாலய சாதனை தொடங்கிவிட்டன.அமெரிக்காவுக்கு 40 பிரிண்டுகளும் அங்கு நடக்கும் அசுரவேக ஆன்லைன் புக்கிங் என வெளிநாட்டில் தனது சாதனை பயணத்தை தொடங்கிய கமலின் படம் உள்நாட்டிலும் அதனை தொடர்கிறது. சென்னை நகரில் மட்டும் இருபது திரையரங்குகளில் தசாவதாரம் வெளியாகிறது. புறநகரையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை முப்பதாகும். இதுவொரு மகத்தான சாதனை. சென்னை மாயாஜாலில் தினம் ஐம்பது காட்சிகள் திரையிட முடிவு செய்துள்ளனர். உலக வரலாற்றில் இத்தனை அதிக காட்சிகள் திரையிடப்பட்டதில்லை எனலாம். மாயாஜாலையும் சேர்த்து சென்னை நகரில் மட்டும் ஒரு நாளைக்கு 120 காட்சிகள். யாரும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை இது. இந்த 120 காட்சிகளும் ஹவுஸ் ஃபுல்லானால் முதல்நாள் வசூலே இரண்டு கோடியை தாண்டிவிடும். தொடர்ந்து ஒரு வாரம் அரங்கு நிறைந்த காட்சிகள் என்றால்....? படம் வெளியானால் சாதனை மேலும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
Write Comment |
||||

படம் வெளிவருவதற்கு முன்பே தசாவதாரத்தின் இமாலய சாதனை தொடங்கிவிட்டன.


