அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சென்ற வார உலகம்: 09-06-08
Monday, 09 June 2008

இறுதிச் சடங்கில் பிரபாகரன் மனைவி?


 இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் கடும் போர் நடைபெற்றுவரும் நிலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி பொது நிகழ்ச்சிகள் எதிலும் இவர் கலந்து கொள்வதில்லை.

விடுதலைப்புலிகளின் பெண்கள் பிரிவில் பணியாற்றி வந்த விடுதலை புலி பெண் தளபதி செல்வி சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரின் இறுதிச்சடங்கு கிளி நொச்சியில் நடந்தது. இதில் பிரபாகரனின் மனைவி மதிவதினி கலந்து கொண்டார். செல்வி உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். பொது நிகழ்ச்சியில் பிரபாகரன் மனைவி கலந்து கொண்டது இதுவே முதல் தடவை.

மரணமடைந்த செல்வி 1995ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். பல்வேறு போர் முனைகளில் வெற்றிகரமாக செயல்பட்டவர். வீராங்கனையாக மட்டும் இல்லாமல் கவிதை எழுதும் திறனும் படைத்தவர் செல்வி. நன்கு பாடவும் செய்வார். விடுதலைப்புலிகளின் ரேடியோ மற்றும் டிவியிலும் அவர் பல நிகழ்ச்சிகளைக் கொடுத்துள்ளார். செல்வியின் வீர தீரத்தைப் பாராட்டி 34 நாள் பயிற்சிக்குப் பின்னர் அவரை மகளிர் போர் பயிற்சிக் கழகத்தின் மூத்த நிர்வாகியாக புலிகள் நிர்வாகம் நியமித்தது.

---

போர்ட்டோ ரிகோவில் ஹிலாரி வெற்றி


 அமெரிக்காவில் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்ந்து எடுப்பதற்காக நடைபெறுகின்ற கட்சி தேர்தலில் போர்ட்டோ ரிகோ தீவில் நடந்த தேர்தலில் ஹிலாரி பெற்றார். இருந்தபோதிலும் நியமனத்துக்கு தேவையான மொத்த ஓட்டுகளில் ஒபாமா தான் முன்னிலையில் இருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 4ந் தேதி நடக்க இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்ந்து எடுப்பதற்காக இலியாய்ஸ் கவர்னரும் ஆப்பிரிக்காவில் பிறந்தவருமான ஒபாமாவுக்கும் முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் மனைவி ஹிலாரிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மொத்தம் 2118 பிரதிநிதிகள் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் வேட்பாளராக நியமனம் பெறமுடியும். ஒபாமாவுக்கு ஹிலாரியை விட கூடுதல் ஓட்டுக்கள் கிடைத்து இருப்பதால் அவர் தான் தற்போது முன்னிலை வகிக்கிறார். இருந்தாலும் நியமனத்துக்கு தேவையான 2118 பிரதிநிதிகள் ஆதரவு யாருக்கும் கிடைக்காது என்று தெரிகிறது. தற்போது ஹிலாரி கிளின்டன் இதுவரை 1915 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார். அடுத்து நடைபெறும் மாகாண தேர்தல்களில் வெற்றி பெற்று ஒபாமாவை விட கூடுதல் ஓட்டுக்களை பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

---

அ.ஜ. தேர்தல்: ஒபாமா தேர்வு


 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு ஒபாமா தேர்வு பெற்றார். வேட்பாளராக தேர்ந்து எடுப்பதற்காக ஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 4ந் தேதி நடைபெறுகிறது. குடியரசு கட்சி வேட்பாளராக ஜான் மெக்கைன் நியமிக்கப்பட்டு உள்ளார். ஜனநாயகக்கட்சி சார்பில் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்காக கட்சிபிரதிநிதிகள் மட்டத்தில் மாநில வாரியாக தேர்தல் நடந்தது. 5 மாதமாக நடந்த இந்த தேர்தலில் தொடக்கத்தில் ஹிலாரி முன்னணியில் இருந்தார். பின்னர் அவர் ஒபாமாவை விட பின்தங்கி விட்டார். பிரதிநிதிகள் ஆதரவை பெறுவதில் ஒபாமா முதலிடம் பிடித்தார். ஒருவர் வேட்பாளராக நியமனம் ஆக 2118 பிரதிநிதிகளின் ஓட்டுக்கள் பெற்றட வேண்டும். தற்போது ஒபாமாவே இந்த அளவு ஆதரவு பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் ஒபாமாவுக்கு ஹிலாரி தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முதல் கறுப்பர் ஒபாமா தான்.


--


10 லட்சம் இல்லீகல் தொழிலாளர்கள்


 சுற்றுலா விசாவில் வந்து மலேசியாவில் குடியேறும் வெளிநாட்டவர் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து அந்த நாடு விழித்துக் கொண்டு விட்டது. இதில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களில் இந்திய வங்க தேசத்தை சேர்ந்த சாதாரண தொழிலாளர்கள் தான் அதிகம் என்று கண்டுபிடித்துள்ளது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகரிக்க வேண்டும் என்று கடந்தாண்டு உள்ள விதிகளை மலேசியா தளர்த்தியது. யார் வேண்டுமானாலும் மலேசியா வரலாம் ஆனால் விமான நிலையத்தில் வந்திறங்கிய பின் விசா வாங்கி ஊர் சுற்றிப்பார்க்கலாம் என்று சலுகைகளை அறிவித்தது.

தற்போது பல நாடுகளிலும் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அதே சமயம் சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் சட்டவிரோதமாக மலேசியாவில் ஊடுருவுவோரும் அதிகமாக நுழைந்து விட்டனர். இப்படி சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் மலேசியாவில் தங்கி விட்டனர். இதனால் மலேசிய அரசுக்கு பெரும் சிக்கல் நிகழ்ந்துள்ளது. தற்போது சட்டவிரோதமாக குடியேறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதால் உள்ளுர்மக்களுக்கு பல வகையிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மலேசியாவில் 30 லட்சம் வெளிநாட்டவர் பல்வேறு துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர். பலர் சட்ட விரோமாக ஏஜென்ட்டுகள் மூலம் நாட்டில் நுழைந்து பல நிறுவனங்களிலும் வேலை பார்க்கின்றனர்.

இதைதடுக்க முதல் கட்டாக சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த தாராள விசா சலுகையை ரத்து செய்தது. தற்போது இதைதடுக்க சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த தாராள விசா சலுகையை ரத்து செய்தது. இந்தியா மற்றும் வங்க தேசத்தவர் மட்டும் தங்கள் நாட்டில் புறப்படும் போது அங்குள்ள மலேசிய தூதரகத்தில் இரண்டு வார சோஷியல் விசா வாங்கி வரவேண்டும் என்று வரையறுத்துள்ளது.


---

விலகினார் ஹிலாரி - ஒபாமாவுக்கு ஆதரவு


 அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான போட்டியிலிருந்து முறைப்படி விலகுவதாக அறிவித்துள்ளார் ஹிலாரி கிளிண்டன் மேலும் ஒபாமாவின் வெற்றிக்கு முழுமையாக பாடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது பிரச்சாரத்தை இன்றுடன் நிறுத்திக் கொள்கிறேன். ஒபாமா போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

எனது முழுமையான ஆதரவை அவருக்கு தெரிவிக்கிறேன். அவரது வெற்றிக்கு பாடுபடுவேன். நாம் அனைவரும் ஒபாமாவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

நம்முடைய முழு ஆதரவையும் பராக் ஒபாமாவுக்காக செலவிட வேண்டும். அவரை அமெரிக்காவின் அடுத்த அதிபராகக் வேண்டும் என்றார் ஹிலாரி.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code