அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
தசாவதாரத்தை ரசித்த கருணாநிதி
Tuesday, 10 June 2008
 தசாவதாரம் படத்தை குடும்பம் மற்றும் பதினைந்து அமைச்சர்களுடன் கண்டுகளித்தார் முதல்வர் கருணாநிதி.

பொதுவாக இதுபோன்ற திரையிடலுக்கு முதல்வருடன் ஒன்று அல்லது இரண்டு அமைச்சர்களே உடன் வருவார்கள், தசாவதாரம் ஜூரம் அமைச்சர்களையும்  தாக்கியிருந்ததால், முதல்வருடன் மொத்தமாக கிளம்பி வர, போர்ஃபிரேம் திரையரங்கு கரைவேட்டிகளால் ஜகஜோதியானது.

முதல்வருடன் கமல், கே.எஸ். ரவிக்குமார், வைரமுத்து ஆகியோரும் படத்தைப் பார்த்தனர்.

தசாவதாரத்தின் அனைத்து அம்சங்களையும் ரசித்த முதல்வர், கமல் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் இருவரையும் நேரிலும் பிறகு தொலைபேசியிலும் பாராட்டினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் படத்தைப் பார்க்க அழைப்பு விடுத்திருக்கிறார் கமல். இதன் நடுவில் வைணவ அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் படத்துக்கு தடைகோரி வழக்குப் பதிவு செய்துள்ளதால், ரிலீஸ் டென்ஷன் தயாரிப்பாளர் தரப்பில் அதிகரித்துள்ளது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code