அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பிலிமுக்கு மாறும் டிஜிட்டல் சிலந்தி
Thursday, 12 June 2008
 ஜி கம்பெனி தயாரிப்பில் ஆதி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் சிலந்தி படம் திரைக்கு வந்து 34 நாட்களை தாண்டி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

படம் முழுவதும் டிஜிட்டல் கேமராவில் படமாக்கியிருக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராமிடம் பயிற்சி பெற்ற பௌசியாபாத்திமா இத்திரைப்படத்திற்கு ஒபிப்திவு செய்திருந்தார்.

முழுவதுமாக டிஜிடடலில் படமாக்கப்பட்டு டிஜிட்டல் படம் என்று சென்சார் செய்யப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை சிலந்தி பெற்றிருக்கிறது. பிலிம் லேப் என்ற சினிமாவின் அஸ்திவாரங்களை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு தொழில் நுட்பத்தின் நவீன வளர்ச்சியை முழுமையாக பயன்படுத்தி வெற்றிப் பெற்றிருக்கிறார்கள்.

30 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் மீடியாக்களும் ரசிகர்களும் கொடுத்த அமோக வரவேற்பை தொடர்ந்து டிஜிட்டல் சிலந்தி பிலிமுக்கு மாற்றப்படுகிறது. ஏனென்றால் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஒருபடம் திரைப்படம் திரையிடப்பட வேண்டுமென்றால் இன்றைய சூழ்நிலையில் அது பிலிமில் இருந்தால் மட்டுமே முடியும். மேலும் தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் சுமார் 40 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ரீலீஸ் ஆன 40 நாட்களை கடந்தும் முதல் ரிலீஸ் போலவே மீண்டும் மொத்தமாக தியேட்டர்களில் ஒரு படம் ரிலீஸ் செய்யப்படும் படம் இதுவே.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code