| குஷ்பு படத்தில் சிம்ரன் |
| Friday, 13 June 2008 | ||||
குஷ்பு தயாரிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சிம்ரன்.குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் ஏற்கனவே இரு படங்களை தயாரிக்கிறது. இதன் மூன்றாவது தயாரிப்பு 'ஐந்தாம் படை'. சுந்தர் சி. நாயகனாக நடிக்கிறார். சுந்தர் சி. கோபிகா நடித்த 'வீராப்பு' படத்தை இயக்கிய பத்ரி ஐந்தாம் படையை இயக்குகிறார். சுந்தர் சி.யின் வழக்கமான படங்களைப்போல அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் கதையாம் ஐந்தாம்படை. இன்று இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. 'சேவல்', 'வாரணம் ஆயிரம்' படங்களில் நடித்து வரும் சிம்ரன் இதில் பிரதான வேடத்தில் நடிக்கிறார். 'சண்டை' படம் வெற்றியடைய நதியா கதாபாத்திரம் முக்கிய காரணம் என்பதால் ஐந்தாம்படையில் சிம்ரனின் கேரக்டரையும் பிரதானப்படுத்தியுள்ளனர். 'ஜாதி மல்லி'யில் குஷ்புவுடன் நடித்த மலையாள நடிகர் முகேசும் படத்தில் உண்டு. வடிவேலுவுடன் உள்ள லடாய் இன்னும் முடிவுக்கு வராததால், இந்தப் படத்திலும் காமெடி ஏரியாவை விவேக்கே கவனிக்கிறார். படத்துக்கு இசை டி.இமான்.
Write Comment |
||||

குஷ்பு தயாரிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சிம்ரன்.


