அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பழனியில் விஜய் - நயன்தாரா
Monday, 16 June 2008
 விஜய், நயன்தாரா முதன் முதலாக இணையும் 'வில்லு' படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது.

இந்தி 'சோல்ஜர்' படத்தின் ரீ-மேக் இது என்று பரவலான பேச்சு. இயக்குனர் பிரபுதேவா அல்லது  விஜய் இதற்கு பதில் சொல்ல வேண்டுமே? ம்ஹூம்.... வாயே திறக்காமல் ஏன் தொடக்கவிழா கூட நடத்தாமல் நேராக படப்பிடிப்புக்கு கிளம்பி விட்டனர்.

அதற்கு முன்பு ஒரேயொரு நாள் போட்டோசெஷன் சென்னையில் நடந்தது. நடனப் பெண்களின் நடுவில் விஜய் மான் கொம்புடன் ஆடுவதை ஒருநாள் முழுதும் ஷூட் செய்தார் பிரபுதேவா. இந்த போட்டோசெஷனில் நயன்தாரா மிஸ்ஸிங்.

'வில்லு'வின் சில காட்சிகள் பழனியில் எடுக்கப்பட உள்ளன. இதனால் பத்து நாட்கள் விஜய்யும், நயன்தாராவும் பழனியில் தங்க உள்ளனர். பொள்ளாச்சியிலும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் முதல்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டது. பிரபுதேவாவின் வேகத்தைப் பார்த்த யூனிட் ஆட்கள், தீபாவளிக்கு முன்பே 'வில்லு' திரைக்கு வரும் என்கிறார்கள்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code