| குசேலனில் விஜய் அஜித் |
| Saturday, 21 June 2008 | ||||
சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்த வாசு பத்திரிகையில் வந்த கற்பனை செய்திகளு்கெல்லாம் சிரிப்பை பதிலாக்கி படம் பற்றி பேசினார்.'குசேலன்', என் டைரக்ஷனில் வெளிவரும் 55-வது படம். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. டப்பிங் வேலைகளும் முடிவடைந்தன. வருகிற திங்கட்கிழமை முதல் பின்னணி இசை சேர்ப்பு வேலை தொடங்க இருக்கிறது. கிராபிக்ஸ் வேலைகள் கடந்த மார்ச் மாதமே தொடங்கி விட்டன. மே மாதம் முதல் வாரத்தில் அந்த வேலைகள் முடிவடைந்தன. அதனால் 'குசேலன்' படம் அடுத்த மாதம் திரைக்கு வந்துவிடும். படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் ஒரே சமயத்தில் தயாராகி இருப்பதால், 60 நடிகர்கள் பங்கேற்றுள்ளனர்.4 மாதங்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தியதால், படம் 82 நாட்களில் முடிவடைந்து இருக்கிறது. நான், டைரக்டர் கே.பாலசந்தரின் ரசிகர். அவருடைய நிறுவனத்தின் படத்தை டைரக்டு செய்ததை பெருமையாக நினைக்கிறேன். இந்த படத்தில் ரசிகர்கள் ஜாலியாக சந்தோஷப்படுகிற அளவுக்கு, ரஜினிகாந்த் வருவார். படத்துக்கு படம் அவர் இளமையாகிக் கொண்டே வருகிறார். இந்த படத்தில் இன்னும் இளமையாக தெரிவார். தமிழ் திரையுலகின் 75-வது வருட பவள விழாவையொட்டி, சினிமாவைப் பற்றிய பாடல் ஒன்று குசேலன் படத்தில் இடம் பெறுகிறது. சினிமா சினிமா சினிமா எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார் இவர்கள் இருந்த சினிமா... இனிமேல் இதுபோல் வருமா... கடவுளை யார் நேரில் பார்த்தது... அதை கண்ணில் காட்டியது சினிமாதான்... என்ற பாடலை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார். சினிமாவில் பணிபுரியும் புரொடக்ஷ்ன் உதவியாளர்கள், லைட்மேன்கள் போன்ற தொழிலாளர்களை பெருமைப்படுத்தும் வகையில், இந்த பாடல் அமைந்து இருக்கிறது. 100 கைகள் சேர்ந்தால் தான் சினிமா ஜெயிக்கும் என்ற கருத்து, இந்த பாடலில் இருக்கிறது. சினிமாவை பெருமைப்படுத்தும் பாடல் என்பதால், இந்த பாடல் காட்சியில் ரஜினியுடன் விஜய், அஜீத், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள்-நடிகைகள் 30 பேர்களை தோன்ற வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். இதற்காக அவர்களை இன்னும் அணுகவில்லை. இனிமேல்தான் அணுகவேண்டும். படத்துக்கு மிக அத்தியாவசித் தேவை என்றால் மட்டுமே இவர்களை பயன்படுத்துவோம். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் வருகிற 30-ந் தேதி நடைபெற இருக்கிறது.
Write Comment |
||||

சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்த வாசு பத்திரிகையில் வந்த கற்பனை செய்திகளு்கெல்லாம் சிரிப்பை பதிலாக்கி படம் பற்றி பேசினார்.


