| தண்ணியில் நமிதா |
| Wednesday, 25 June 2008 | ||||
ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் இயக்கும் 'ஜகன்மோகினி'யில் கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பெண்ணாக வருகிறார் நமிதா.விட்டலாச்சாரியாரின் 'ஜகன்மோக்னி'யின் ரீ-மேக் இந்தப் படம் என்று சொல்லப்பட்டாலும், இரண்டு படங்களின் கதைகளும் வெவ்வேறாம். முந்நூறு ஆண்டுகளுக்குமுன் கதை நடப்பதுபோல் புதிய 'ஜகன்மோகினி' உருவாக்கப்படுகிறது. பீரியட் பிலிம் என்பதால் பெரும்பாலான படப்பிடிப்பு அரங்குகளில் நடந்து வருகிறது. மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் மெகா அரங்கு ஒன்று அமைத்து தற்போது படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். அடுத்து விசாகப்பட்டிணம், ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அங்கும் பிரமாண்ட அரங்குகள் அமைக்க உள்ளனர். படத்தின் ஹைலைட் அந்தமான் கடலில் போடயிருக்கும் மூழ்கும் கப்பல் அரங்கு. பலலட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமாக இதனை அமைக்க உள்ளார், கலை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி. கடலுக்குள் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளன, தவிர கடலில் முத்துக் குளிக்கும் பெண்ணாக வருகிறார் நமிதா. இவற்றை துல்லியமாக படம் பிடிக்க ஹாலிவுட்டிலிருந்து ஸ்பெஷல் கேமரா வரவழைக்கப்படுகிறது. கடலுக்கடியில் எடுக்கப்படும் காட்சிகளுக்காக வெளிநாட்டிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.
Write Comment |
||||

ஒளிப்பதிவாளர் என்.கே.விஸ்வநாதன் இயக்கும் 'ஜகன்மோகினி'யில் கடலில் மூழ்கி முத்தெடுக்கும் பெண்ணாக வருகிறார் நமிதா.


